சூப்பர்மேனா இருப்பாரோ.. 50 மணி நேரத்துல 350 கிமீ.. இணையத்தை தெறிக்கவிட்ட இளைஞர்..வைரல் வீடியோ..!
முகப்பு > செய்திகள் > இந்தியாராஜஸ்தானை சேர்ந்த இளைஞர் ஒருவர் 50 மணி நேரத்தில் 350 கிலோ மீட்டர் ஓடி அனைவரையும் ஆச்சர்யப்படுத்தி இருக்கிறார். இதற்கு அவர் சொன்ன காரணம் தான் அனைவரையும் நெகிழ வைத்திருக்கிறது.
யம்மாடி...உலகத்துலயே மிக உயரமான முருகன் சிலை கும்பாபிஷேகம்.. ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவி வழிபாடு..!
ஓட்டம்
ராஜஸ்தானின் நாகௌர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் பிச்சார். 24 வயதான சுரேஷ் ராஜஸ்தானில் உள்ள ஷிகர் நகரத்தில் இருந்து புது டெல்லிக்கு ஓடியே சென்றுள்ளார். அதாவது 350 கிலோ மீட்டர் தூரத்தை 50 மணி நேரத்தில் ஓடி அனைவரையும் திகைக்க வைத்திருக்கிறார் சுரேஷ். அதுமட்டும் அல்லாமல் தன்னுடைய கையில் இந்திய தேசிய கோடியை ஏந்தியபடியே ஓடியுள்ளார் இந்த இளைஞர்.
ராணுவ ஆசை
சிறுவயது முதலே இந்திய ராணுவத்தில் சேரவேண்டும் என்ற ஆசையோடு இருக்கும் சுரேஷ், புது டெல்லியில் நடைபெறும் ஒரு போராட்டத்திற்கு செல்ல திட்டமிட்டு உள்ளார். நாடு முழுவதிலும் உள்ள தன்னைப்போன்ற ராணுவ கனவு கொண்டவர்களுக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் இந்த முயற்சியில் இறங்கியதாக கூறுகிறார் இவர்.
போராட்டம்
இந்திய ராணுவத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக அதிகாரிகள் அல்லாத பணியிடங்களுக்கான தகுதி தேர்வுகள் நடத்தப்படவில்லை. இதனால் இந்திய ராணுவத்தில் சேரவேண்டும் என்ற ஆர்வத்துடன் இருக்கும் இளைஞர்கள் வயது அடிப்படையில் நிராகரிக்கப்பட வாய்ப்புகள் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துவந்தனர். இந்நிலையில், இன்று டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் சுமார் ஆயிரம் பேர் கூடி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
உத்வேகம்
இந்நிலையில் 350 கிலோ மீட்டர் தூரத்தை 50 மணி நேரத்தில் ஓடி கடந்த சுரேஷ் இது குறித்து பேசுகையில்,"நான் இந்திய ராணுவத்தில் சேர்வதில் ஆர்வமாக உள்ளேன். 2 ஆண்டுகளாக ஆள்சேர்ப்பு நடைபெறவில்லை. இதனால் நாகௌர், சிகார் மற்றும் ஜுன்ஜுனு நகரைச் சேர்ந்த இளைஞர்கள் வயதின் அடிப்படையில் தகுதி தேர்வில் நிராகரிக்கப்பட வாய்ப்புள்ளது. நம் நாட்டு இளைஞர்களின் உற்சாகத்தை அதிகரிக்கவே நான் டெல்லிக்கு ஓடி வந்துள்ளேன்" என்றார்.
இந்திய ராணுவத்தில் சேரவேண்டும் என்ற ஆசையில் ராஜஸ்தானில் இருந்து புது டெல்லிக்கு ஓடியே சென்ற இளைஞரின் வீடியோ சமூக வலை தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
#WATCH दिल्ली: भारतीय सेना में शामिल होने के लिए इच्छुक एक युवा राजस्थान के सीकर से दिल्ली में एक प्रदर्शन में शामिल होने के लिए 50 घंटे में 350 किलोमीटर दौड़कर पहुंचा। pic.twitter.com/rpRVH8k4SI
— ANI_HindiNews (@AHindinews) April 5, 2022
அலுவலகத்தில் பில்கேட்ஸ் செஞ்ச சேட்டை.. பழைய வீடியோவை பகிர்ந்த பில் கேட்ஸ்..!