கோப்பையை வெல்லாமல் இந்த MILESTONE-ஐ எட்டிய ஒரே டீம் RCB தான்… அப்படி என்ன சாதனை தெரியுமா?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுRCB அணி ஐபிஎல் தொடரில் 100 வெற்றிகள் என்ற மைல்கல் சாதனையை எட்டியுள்ளது.
CSK வீரருக்கு ஏற்பட்ட அதே பிரச்சனை.. இப்போ புஜராவுக்கு வந்திருக்கு.. காரணம் இதுதானா..?
ஐபிஎல் தொடரில் RCB….
ஐபிஎல் தொடரின் ஆதிக்கம் மிக்க அணிகளில் RCB யும் ஒன்று. அந்த அணிக்கு கடந்த சில ஆண்டுகளாக தலைமைதாங்கி வந்தார். ஆனால் கடந்த ஆண்டு அதன் பொறுப்பில் இருந்து விலகினார். 2014 ஆம் ஆண்டு முதல் ராயல் சேலஞர்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்று வழிநடத்திய கோலி கடந்த ஆண்டு கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினார். 7 ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணியை வழிநடத்திய போதும் அவரால் ஐபிஎல் கோப்பையை பெற்றுத்தர முடியவில்லை. ஆனால் கடைசி வரை ஆர் சி பி அணிக்காகதான் விளையாடுவேன் என அறிவித்திருந்தார். இதையடுத்து ஆர் சி பி அவரை 15 கோடிக்கு தக்கவைத்தது.
அணியில் நடந்த மாற்றம்….
ஆர் சி பி அணியின் தூண்களில் ஒருவரும் முன்னாள் கேப்டன் கோலியின் நெருங்கிய நண்பருமான டிவில்லியர்ஸ், கடந்த ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். ஆர் சி பி-க்காக கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக விளையாடி வந்த டிவில்லியர்ஸின் இந்த அறிவிப்பு அந்த அணிக்கு பின்னடைவாக அமைந்தது. ஆனால் இப்போது அவரை அணி நிர்வாகம் அணியில் ஆலோசகராக நியமித்துள்ளது.
கோலியின் ராஜினாமாவுக்கு பிறகு புதிய கேப்டனாக தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த டு பிளஸ்சி அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே தென்னாப்பிரிக்க அணியை வழிநடத்தியுள்ளார். அதுபோலவே ஐபிஎல் தொடரில் நான்கு முறைக் கோப்பை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வீரர்களில் ஒருவராக இருந்துள்ளார். 37 வயதாகும் டு பிளஸ்சிதான் இந்த ஆண்டு அதிக வயதுமிக்க கேப்டனாக உள்ளார்.
ஐபிஎல் 2022 சீசன்…
இந்த சீசனில் இதுவரை மூன்று போட்டிகளில் விளையாடியுள்ள RCB இரண்டில் வெற்றியும் ஒன்றில் தோல்வியும் பெற்றுள்ளது. நேற்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் மோதிய பெங்களூரு அணி இறுதி ஒவரில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் தினேஷ் கார்த்திக் மற்றும் சபாஷ் நதீம் ஆகியோர் சிறப்பாக விளையாடி வெற்றியைக் கைவசப்படுத்தினர்.
100 ஆவது ஐபிஎல் வெற்றி…
இந்த போட்டியில் பெற்ற வெற்றி RCB அணியின் 100 ஆவது ஐபிஎல் வெற்றியாகும். இந்த மைல்ஸ்டோனை எட்டும் நான்காவது அணியாக RCB உள்ளது. முதல் இடத்தில் மும்பை இந்தியன்ஸ் 125 வெற்றிகளோடும், இரண்டாவது இடத்தில் சி எஸ் கே 117 வெற்றிகளோடும், முன்றாவது இடத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 109 வெற்றிகளோடும் உள்ளது. 100 போட்டிகளுக்கு மேல் வெற்றி பெற்ற இந்த மூன்று அணிகளும் ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளன. ஆனால் ஒரு முறை கூட கோப்பையை வெல்லாமல் இந்த மைல்கல்லை எட்டிய அணியாக RCB உள்ளது. இதுவரை ஐபிஎல் தொடரில் 215 போட்டிகளில் விளையாடியுள்ள RCB 100 வெற்றியும் 107 தோல்வியும் அடைந்துள்ளது. மூன்று போட்டிகளில் முடிவு எட்டப்படாமலும், 5 போட்டிகள் டையிலும் முடிந்துள்ளன.
யம்மாடி...உலகத்துலயே மிக உயரமான முருகன் சிலை கும்பாபிஷேகம்.. ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவி வழிபாடு..!