யம்மாடி...உலகத்துலயே மிக உயரமான முருகன் சிலை கும்பாபிஷேகம்.. ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவி வழிபாடு..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சேலத்தில் அமைந்து உள்ள உலகின் மிக உயரமான முருகன் கோவில் கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. இதில் ஹெலிகாப்டர் மூலமாக மலர்தூவி வழிபாடு செய்யப்பட்டது.
குழந்தைக்கு இப்படி ஒரு பெயரா? ஆதார் கார்டை பெயரை பார்த்து அதிர்ந்து போன அதிகாரிகள்..
உயரமான முருகன்
மலேசியாவில் உள்ள பத்துமலை முருகன் சிலை தான் உலகின் மிக உயரமான முருகன் சிலையாக கருதப்பட்டு வந்தது. இங்குள்ள முருகன் சிலை 142 அடி உயரமாகும். இந்நிலையில் தமிழகத்தின் சேலம் மாவட்டத்தில் உள்ள புத்திர கவுண்டம்பாளையம் என்னும் ஊரில் 146 உயர முருகன் சிலை அமைக்கப்பட்டு உள்ளது. ஆக, தற்போது உலகின் மிக உயரமான முருகன் சிலை என்ற பெருமையை பெற்றுள்ளது இந்த சிலை.
2015-ம் ஆண்டு திட்டமிட்டு 2016-ம் ஆண்டு முதல் இதன் திருப்பணி தொடங்கியது. முருகனின் ஆறுபடை வீடுகளிலில் இருந்து மண் கொண்டுவரப்பட்டு முருகன் சிலை வடிக்கும் பணியானது நடைபெற்று வந்தது. மலேசியாவில் முருகன் சிலையை வடிவமைத்த திருவாரூர் தியாகராஜப் ஸ்தபதி அவர்களின் குழு இந்த சிலை வடிக்கும் பணியில் ஈடுபட்டது.
கும்பாபிஷேகம்
4 வருடங்களாக நடைபெற்றுவந்த திருக்கோவில் அமைக்கும் பணிகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, இன்று இந்த கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில், திருவாரூர் சுந்தரமூர்த்தி சிவாச்சாரியார் மற்றும் அறுபடை முருகன் கோவில் குருக்கள் முன்னிலையில் மங்கள வாத்தியங்கள் முழங்க குடமுழுக்கு விழா நடைபெற்றது.
பல்வேறு ஊர்களில் இருந்து எடுத்துவரப்பட்ட புண்ணிய தீர்த்தங்கள் ஊற்றப்பட்டு நடைபெற்ற இந்த கும்பாபிஷேகத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர். கோவிலில் ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவப்பட்டது, பலரையும் திகைக்க வைத்தது.
லிப்ட்
3 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட இந்த உயரமான முருகன் சிலையில் பாலாபிஷேகம் செய்ய லிப்ட் ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது. பஞ்சவர்ண நிறத்தில் எழுந்தருளி இருக்கும் இந்த முருகனின் சிலைக்கு பக்தர்கள் இந்த லிப்ட் மூலமாக மேலே சென்று பால் அபிஷேகம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நான்கு வருடங்களாக நடைபெற்றுவந்த உலகின் மிகப்பெரிய முருகன் சிலை அமைக்கும் பணிகள் முடிவடைந்து, இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றிருப்பது பக்தர்களை பரவசப்படுத்தியுள்ளது.
அலுவலகத்தில் பில்கேட்ஸ் செஞ்ச சேட்டை.. பழைய வீடியோவை பகிர்ந்த பில் கேட்ஸ்..!