'சோறு', 'தண்ணி'ன்னு ஒண்ணும் இல்லாம... தொடர்ந்து 'பப்ஜி' ஆடிய சிறுவன்... 'இறுதி'யில் சிறுவனுக்கு நேர்ந்த 'விபரீதம்'!!!
முகப்பு > செய்திகள் > இந்தியாஊரடங்கு காலம் என்பதால் மொபைல் போன் கேம்களில் சிறுவர்கள் முதல் வயதானவர்கள் வரை அதிக நேரத்தை செலவழித்து வருவது வாடிக்கையாகி வருகிறது. இதனால் பல ஆபத்துகளும் ஏற்பட்டு வருகிறது.

ஆந்திர பிரதேச மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் அமைந்துள்ள கிராமம் ஒன்றை சேர்ந்த 16 வயது சிறுவன், ஊரடங்கு சமயங்களில் தனது அதிக நேரத்தை மொபைல் கேமான 'பப்ஜி' விளையாடி செலவழித்து வந்துள்ளார். இந்நிலையில், தொடர்ந்து ஒரு நாள் முழுவதும் தண்ணி, உணவு என எதையும் எடுத்துக் கொள்ளாமல், தொடர்ந்து பப்ஜி ஆடி வந்துள்ளார். இதன் காரணமாக, சிறுவனின் உடம்பில் நீரிழப்பு ஏற்பட்டு உடல்நிலை மோசமாகியுள்ளது.
உடனடியாக அவரது பெற்றோர்கள், சிறுவனை மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்துள்ளனர். சிறுவனுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்ட நிலையில், நெகட்டிவ் என முடிவுகள் வெளி வந்தது. ஆனால் சிறுவன் கடும் வயற்று வலியால் அவதிப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து, அடுத்த சில மணி நேரங்களிலேயே சிறுவன் உயிரிழந்துள்ளான்.
முன்னதாக, இதே போல சிறுவன் ஒருவன், தொடர்ந்து பப்ஜி கேம் ஆடிய நிலையில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. அதே போல மற்றொரு சிறுவன், பப்ஜி கேமுக்கு வேண்டி தனது தந்தையின் வங்கி கணக்கில் இருந்து 16 லட்சத்தை செலவழித்திருந்தது குறிப்பிடத்தக்கது. மொபைல் கேம்களில் உள்ள ஆபத்தை உணராமல், தொடர்ந்து இது போன்ற செயல்களில் சிறுவர்கள் ஈடுபட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
