கூகுள்ல 'இந்த' பிரச்சனை இருக்குங்க...! 'தவறை கண்டுபிடித்த சென்னை இன்ஜினியரிங் மாணவர்...' 'வெறும் பாராட்டோடு முடிக்கல...' - கூகுள் கொடுத்த 'வாவ்' பரிசு...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்உலகில் பெரும்பாலானோர் உபயோகப்படுத்தும் வலைத்தள நிறுவனங்களில் ஒன்று கூகுள் ஆகும்.

என்னதான் ஹை-டெக் நிறுவனம் என்றாலும், யானைக்கும் அடி சறுக்கும் என்பதைப்போல இந்நிறுவனங்களின் சேவைகளிலும், தொழில்நுட்பங்களிலும் சிறிய அளவிலாவது குறைபாடுகள் இருக்கத்தான் செய்கின்றன.
மேலும் கூகுள் நிறுவனத்தின் குறைகளை சுட்டிக்காட்டினால் அதனை சரி செய்துகொள்ளவும், குறையை சுட்டிகாட்டியவர்களை பாராட்டவும் அந்நிறுவனம் தயங்குவதும் இல்லை மறப்பதும் இல்லை.
இதற்கு முன்பே இந்தியாவை சேர்ந்த சிலர் அதற்குண்டான பரிசு தொகையை வாங்கி இருந்தாலும் தற்போது அதன் தொடர்ச்சியாக, சென்னை ஆவடி பகுதியை சேர்ந்த இன்ஜினியரிங் மாணவரான ஸ்ரீராம் கேசவன் என்பவர் 'Appsheet' எனப்படும் அப்ளிகேஷனை தயாரிப்பதற்கான செயலியில் வாடிக்கையாளர்களின் தகவல்கள் மற்றும் அவர்களுடைய படைப்புகள் திருடப்படுகிறது என்பது குறித்த தவறை கூகுள் நிறுவனத்திற்கு சுட்டிக்காட்டி அனுப்பியுள்ளார்.
ஸ்ரீராமின் இந்த உதவியைப் பாராட்டிய கூகுள் நிறுவனம் அவருக்கு இந்திய மதிப்பில் சுமார் ரூ.2,30,000 பரிசுத் தொகையை வழங்கி பாராட்டியுள்ளது. மேலும் அவருடைய பெயரை கூகுளின் Half of Fame-ல் சேர்த்து மரியாதை அளித்துள்ளது.

மற்ற செய்திகள்
