பூமிக்கு அடியில மர்ம சத்தம்.. அச்சத்தில் கிராமம்.. 9,700 பேர் மரணிக்க காரணமா இருந்த இடமா.?
முகப்பு > செய்திகள் > இந்தியாமகாராஷ்டிராவில் உள்ள ஒரு கிராமத்தில் பூமிக்கு அடியில் மர்ம ஒலி கேட்பதாக பரவி வரும் தகவல், அப்பகுதி மக்களை கடும் அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம், லத்தூர் மாவட்டத்தில் ஹசோரி என்னும் கிராமம் அமைந்துள்ளது. இது கில்லாரி பகுதியில் இருந்து 28 கி.மீ தொலைவில் உள்ளது.
அப்படி இருக்கையில், அந்த கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பில் இருந்து மக்களை அச்சப்படுத்தும் ஒருவித சம்பவம், அரங்கேறி வருகிறது.
அதாவது, அந்த கிராமத்தின் பூமிக்கு அடியில் ஏதோ மர்மமான சத்தங்கள் கேட்பதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து இது மர்மமாகவே இருப்பதால், அப்பகுதி மக்கள் கடும் அச்சத்திலும் குழப்பத்திலும் உறைந்து போயுள்ளனர். ஏற்கனவே அந்த பூமியில் சுமார் 9700-க்கும் அதிகமானோர் பலியான கொடூர சம்பவமும் பல ஆண்டுகளுக்கு முன் நடந்துள்ளது.
கடந்த 1993 ஆம் ஆண்டு, அப்பகுதியில் மிகவும் பலம் வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மொத்தம் 10 கிராமங்கள் இதன் மூலம் தரை மட்டமானதாக தகவல்கள் தெரிவிக்கும் நிலையில், கிட்டத்தட்ட மொத்தம் 9700 பேர் இறந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது. நிலநடுக்கம் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட போதும் இவ்வ்ளவு பெரிய இழப்பு ஏற்பட்ததற்கான காரணம் என்ன என்பது இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
அப்படிப்பட்ட ஒரு இடத்தில் இத்தனை ஆண்டுகள் கழித்து பூமிக்கு அடியில் மர்ம சத்தம் கேட்டு வருவதால், நிலநடுக்கம் காரணமாக இது ஏற்பட்டிருக்கலாம் என்றும் அப்பகுதி மக்கள் கருதி வருகின்றனர். ஆனால், அதே வேளையில் 1993 ஆம் ஆண்டுக்கு பிறகு, நில அதிர்வுகள் எதுவும் பதிவாகவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, பொது மக்களின் பயத்தை போகவும், பூமிக்கு அடியில் கேட்கும் சத்தம் என்ன என்பதை அறிந்து குழப்பத்தை தீர்க்கவும் மாவட்ட நிர்வாகம் அப்பகுதியில் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறது. புவி காந்தவியல் நிபுணர்களும் இந்த ஆய்வில் களமிறங்கி உள்ளனர். இதுவரை சத்தம் எதுவும் பதிவாகவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றது. தொடர்ந்து ஆய்வு நடப்பதால் மக்கள் பீதி அடைய வேண்டாம் என்றும் லத்தூர் மாவட்ட ஆட்சியர் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Also Read | அடுத்த 90 வருசத்துக்கு சீல்.. ராணி எலிசபெத் உயில் குறித்து வெளியான ஆச்சரியமூட்டும் தகவல்கள்!!