அடுத்த 90 வருசத்துக்கு சீல்.. ராணி எலிசபெத் உயில் குறித்து வெளியான ஆச்சரியமூட்டும் தகவல்கள்!!
முகப்பு > செய்திகள் > உலகம்சுமார் 70 ஆண்டுகளாக பிரிட்டன் ராணியாக வலம் வந்த ராணி எலிசபெத், தனது 96 ஆவது வயதில் கடந்த செப்டம்பர் 8 ஆம் தேதியன்று உயிரிழந்தார்.
Also Read | "தோளுல 300 கிலோ வெயிட்டு".. ரியல் பாகுபலியாக மாறிய கேரள வாலிபர்.. அனல் பறக்கும் வீடியோ!!
முன்னதாக, ராணி எலிசபெத் இறப்பதற்கு ஒரு சில தினங்கள் முன்பாகவே, அவரது உடல்நிலை சற்று மோசமாக இருந்ததாகவும், தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் அவர் இருந்து வந்ததாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது.
அப்படி ஒரு சூழ்நிலையில், தனது 96 ஆவது வயதில், ராணி எலிசபெத் காலமானார். அதிக ஆண்டுகள் பிரிட்டன் ராணியாக இருந்தவர் என்ற பெருமையும் எலிசபெத் வசம் தான்.
ராணி எலிசபெத் மறைவுக்கு உலக அளவில் முன்னணி தொழிலதிபர்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் தங்களின் இரங்கல்களை தெரிவித்திருந்தனர். மேலும், செப்டம்பர் 19ஆம் தேதி ராணி எலிசபெத் உடல் நல்லடக்கம் செய்யப்படும் என்றும் அதிகாரப்பூர்வமாக பக்கிங்காம் அரண்மனை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ராணி எலிசபெத் உயில் குறித்து ஒரு தகவல் தற்போது வெளியாகி, அதன் பின்னால் உள்ள சுவாரஸ்ய காரணமும் தெரிய வந்துள்ளது.
ராணி எலிசபெத் மறைவுக்கு பிறகு, அவர் பயன்படுத்திய பொருட்கள் சில பொது வெளியில் மக்களின் பார்வைக்கும், சிலது ரகசியமாக பாதுகாக்கப்பட்டும் வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. அந்த வகையில், அரசு குடும்ப நடைமுறைப்படி, ராணி எலிசபெத்தின் உயில் சீல் வைக்கப்பட்டு 90 ஆண்டுகளுக்கு லாக்கரில் வைத்து பாதுகாக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு காரணம், மாட்சிமைப் பொருந்திய அரசு குடும்ப உறுப்பினர்களின் தனி உரிமையானது பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக இந்த நடைமுறை 1910 ஆம் ஆண்டு முதல் பின்பற்றப்பட்டு வருகிறது. இதனால், அவர்களது உயில் சீல் வைக்கப்பட்டு லண்டனில் உள்ள ரகசிய லாக்கரில் பாதுகாக்கப்பட்டு வருவது வழக்கம். மேலும், இதனை லண்டன் உயர்நீதிமன்ற குடும்ப வழக்குப் பிரிவின் தலைமை நீதிபதியின் கட்டுப்பாட்டின் கீழ் இந்த உயில்கள் பாதுகாக்கப்பட்டு வந்தாலும், அதனை பிரித்து படிக்கும் அதிகாரம் அவர்களுக்கு கூட இல்லை என தகவல்கள் தெரிவிக்கின்றது.
முன்னதாக, ஆஸ்திரேலியாவின் சிட்னி மேயர் மற்றும் மக்களுக்காக கடந்த 1986 ஆம் ஆண்டு ராணி எலிசபெத் எழுதிய கடிதத்தை மக்கள் முன்னிலையில் 2085 ஆம் ஆண்டு தான் திறந்து படிக்க வேண்டும் என அவரே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதனால், அடுத்த 63 ஆண்டுகளுக்கு அந்த கடிதம் ரகசியமாக தான் இருக்கும்.