"சில மரபுகள் எப்போவும் மாறாது".. ரக்ஷாபந்தனை முன்னிட்டு ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்த சிறுவயது புகைப்படம்.. அந்த CAPTION தான் செம்ம..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்திய பணக்காரர்களுள் ஒருவரும் தொழிலதிபருமான ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்துள்ள புகைப்படம் தற்போது வைரலாக பரவி வருகிறது.
Also Read | "ஆத்தாடி, இந்த ராக்கி கயிறு விலை என்ன இவ்ளோ இருக்கு?!.." கேட்டதும் மிரண்டு போகும் சகோதரிகள்..
ரக்ஷாபந்தன்
இந்தியாவில் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமான பண்டிகைகள் கொண்டாப்படுக்கின்றன. அந்த வகையில் வட இந்தியாவில் மிகவும் பிரசித்திபெற்ற பண்டிகைகளில் ஒன்று தான் இந்த ரக்ஷாபந்தன். இந்த நாளில் பெண்கள் தங்களது சகோதரர்களுக்கு வண்ண கயிறை கையில் கட்டுகின்றனர். இதனை ராக்கி என்று அழைக்கின்றனர். மேலும், மனதுக்கு நெருக்கமான ஆண்களை தங்களது சகோதரர்களாக பாவித்து அவர்களது கையிலும் இந்த ராக்கியை பெண்கள் கட்டுகின்றனர்.
இன்று கொண்டாடப்படும் ரக்ஷாபந்தன் பண்டிகையை முன்னிட்டு, இந்திய பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பொதுமக்களுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தனர். இந்தியா முழுவதும் கோலாகலமாக இந்த பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இதனிடையே இந்திய பணக்காரர்களுள் ஒருவரும் தொழிலதிபருமான ஆனந்த் மஹிந்திரா தன்னுடைய பழைய புகைப்படம் ஒன்றை பகிர்ந்திருக்கிறார்.
ஆனந்த் மஹிந்திரா
மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் துடிப்புடன் இயங்கி வருபவர். இணைய வெளிகளில் தான் சந்திக்கும் மனிதர்களிடையே பன்முக திறமை கொண்டவர்களையும், கடின உழைப்பாளிகளையும் கண்டறிந்து அவர்களுக்கான அங்கீகாரம் வழங்குவதை ஆனந்த் மஹிந்திரா தொடர்ந்து செய்துவருகிறார். அதேபோல தன்னை ஈர்க்கும் விஷயங்கள் குறித்தும் இணைய வெளிகளில் பதிவிடுவது இவரது வழக்கமாகும். இதன் காரணமாக சமூக வலை தளங்கள் வாயிலாக இவரை 8.9 மில்லியன் மக்கள் பின்தொடர்ந்து வருகின்றனர்.
வைரல் ட்வீட்
இந்நிலையில், ஆனந்த் மஹிந்திரா தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தனது தங்கை மற்றும் தாயுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்திருக்கிறார். அந்த பதிவில்,"என்னிடம் இருக்கும் ஆரம்பகால ரக்ஷாபந்தன் படங்களில் ஒன்று. டெல்லியில் என் சகோதரி ராதிகா மற்றும் என் அம்மாவுடன் இருக்கும்போது எடுக்கப்பட்ட புகைப்படம் இது. நான் விரைவில் டெல்லிக்கு செல்ல இருக்கிறேன். குடகு பகுதியில் இருக்கும் எனது தங்கை அனுஜா அனுப்பிய ராக்கி குறித்த நேரத்தில் வந்து சேர்ந்தது. சில மரபுகள் எப்போதும் அழியாது" எனக் குறிப்பிட்டிருக்கிறார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
One of the earliest #RakshaBandhan pics in my archive. With my sister Radhika and my mother in Delhi. And I’m headed to her place shortly. A big shoutout to my younger sister Anuja who’s in Kodagu right now but her Rakhi arrived well in time! Some traditions never die… pic.twitter.com/ISq3ZQrsMF
— anand mahindra (@anandmahindra) August 11, 2022