'என்னோட ஹீரோ".. ஆனந்த் மஹிந்திரா போட்ட வைரல் ட்வீட்.. யாருப்பா இவரு..?
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்திய பணக்காரர்களுள் ஒருவரும் தொழிலதிபருமான ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்துள்ள ட்வீட் தற்போது வைரலாக பரவி வருகிறது.

ஆனந்த் மஹிந்திரா
மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் துடிப்புடன் இயங்கி வருபவர். இணைய வெளிகளில் தான் சந்திக்கும் மனிதர்களிடையே பன்முக திறமை கொண்டவர்களையும், கடின உழைப்பாளிகளையும் கண்டறிந்து அவர்களுக்கான அங்கீகாரம் வழங்குவதை ஆனந்த் மஹிந்திரா தொடர்ந்து செய்துவருகிறார். அதேபோல தன்னை ஈர்க்கும் விஷயங்கள் குறித்தும் இணைய வெளிகளில் பதிவிடுவது இவரது வழக்கமாகும். இதன் காரணமாக சமூக வலை தளங்கள் வாயிலாக இவரை 8.9 மில்லியன் மக்கள் பின்தொடர்ந்து வருகின்றனர். இந்நிலையில், பரம்ஜித் சிங் என்பவரை பற்றி ஆனந்த் மஹிந்திரா போட்ட ட்வீட் தற்போது வைரலாகி வருகிறது.
சோகம்
பரம்ஜித் சிங்கின் தந்தை ஒரு அரசு ஊழியர். சிங் தனது சொந்த தொழிலைத் தொடங்கியவுடன், ரஸ்னா பிராண்டின் ஒரே விநியோகஸ்தராக பணியாற்றினார். 1984 ஆம் ஆண்டு ஏற்பட்ட கலவரத்தில் இவருடைய தொழில் முற்றிலுமாக பாதிப்படைந்தது. இதனால் தொழிலை விட்டுவிட்டு வெளியேறிய சிங், அதன் பிறகு ஆட்டோ ஓட்ட துவங்கியுள்ளார். ஆனால், 7 ஆண்டுகள் கழித்து துரதிருஷ்ட வசமாக முசோரியில் அவருக்கு விபத்து ஏற்பட்டிருக்கிறது. இதனால் 13 நாட்கள் கோமாவில் இருந்திருக்கிறார்.
இவருடைய மூட்டு, மார்பு எலும்புகள் ஆகியவற்றில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதனை தொடர்ந்து அவருக்கு மாரடைப்பும் ஏற்பட்டிருக்கிறது. இருப்பினும் குணமாகி வந்த பிறகு மீண்டும் ஆட்டோ ஓட்டும் தொழிலை செய்து வருகிறார் பரம்ஜித் சிங்.
ஹீரோ
இந்நிலையில், இந்திய பணக்காரர்களில் ஒருவரும் தொழிலதிபருமான ஆனந்த் மஹிந்திரா தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில்,"அவர்தான் என்னுடைய 'ஸ்டார்ட்-அப்' ஹீரோ. ஒரு தொழிலைத் தொடங்கியதற்கு பிறகு அதிக மன உறுதியும் தைரியமும் தேவை. அவர் தனது வாழ்க்கையை மீண்டும் தொடங்கினார் மற்றும் மீண்டும் கண்டுபிடித்தார் ... ஒரு முறை அல்ல, இரண்டு முறை" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், ஆனந்த் மஹிந்திராவின் ட்வீட் தற்போது வைரலாக பரவி வருகிறது. இதனிடையே,"பல மில்லியன் மக்களுக்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறார்" என்றும் "விடாமுயற்சியின் உருவம்" என்றும் நெட்டிசன்கள் பரம்ஜித் சிங் குறித்து கமெண்ட் போட்டு வருகின்றனர்.

மற்ற செய்திகள்
