"வாழ்க்கை ரொம்ப சிறியது".. ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்த அருமையான புகைப்படம்.. ஒரே போட்டோ-ல LIFE பத்தி சொல்லிட்டாரே..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்திய பணக்காரர்களுள் ஒருவரும் தொழிலதிபருமான ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்துள்ள ட்வீட் தற்போது வைரலாக பரவி வருகிறது.
வாழ்க்கை குறித்து பன்னெடுங்காலமாக பல்வேறு நிபுணர்கள், தத்துவ ஞானிகள் பல கருத்துக்களை கூறியிருக்கின்றனர். ஆனாலும், ஒவ்வொரு காலத்துக்கும் இந்த கருத்துகள் மக்களுக்கு போதிக்கப்படும் வகைமை மட்டும் மாறிக்கொண்டே இருக்கிறது. அந்த வகையில் இத்தாலியை சேர்ந்த கலைஞர் ஒருவர், வாழ்க்கையின் முக்கியத்துவம் குறித்து உருவாக்கிய சிற்பம் ஒன்று பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. இந்த புகைப்படத்தை ஆனந்த் மஹிந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.
ஆனந்த் மஹிந்திரா
மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் துடிப்புடன் இயங்கி வருபவர். இணைய வெளிகளில் தான் சந்திக்கும் மனிதர்களிடையே பன்முக திறமை கொண்டவர்களையும், கடின உழைப்பாளிகளையும் கண்டறிந்து அவர்களுக்கான அங்கீகாரம் வழங்குவதை ஆனந்த் மஹிந்திரா தொடர்ந்து செய்துவருகிறார். அதேபோல தன்னை ஈர்க்கும் விஷயங்கள் குறித்தும் இணைய வெளிகளில் பதிவிடுவது இவரது வழக்கமாகும். இதன் காரணமாக சமூக வலை தளங்கள் வாயிலாக இவரை 8.9 மில்லியன் மக்கள் பின்தொடர்ந்து வருகின்றனர்.
வாழ்க்கையை அனுபவியுங்கள்
ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்த இந்த புகைப்படத்தில் ஐஸ் கட்டிகளால் உருவாக்கப்பட்ட சிறிய மனித சிலைகள் படிக்கட்டுகளில் வைக்கப்பட்டுள்ள. அங்கிருப்பவர்கள் அதனை ஆச்சர்யத்துடன் புகைப்படம் எடுக்கின்றனர். அந்த பதிவில், "இத்தாலியை சேர்ந்த சிற்பி ஒருவர் வாழ்க்கை மிகவும் சிறியது. அது உருகுவதற்குள் மகிழ்ச்சியாக இருந்திடுங்கள் என்ற தலைப்பில் ஐஸ் கட்டிகளால் ஆன சிற்பங்களை செதுக்கியுள்ளார்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஆனந்த் மஹிந்திரா,"சக்தி வாய்ந்த படம். ஞாயிற்று கிழமைக்கு ஏற்றது. பூமியில் உங்கள் நேரத்தை அதிகம் பயன்படுத்துங்கள்... இது ஒரு சிறிய பயணம் மட்டுமே" எனக் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், இந்த புகைப்படம் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Powerful image. Perfect for Sunday reflection. Make the most of your time on the planet… it’s only a short trip.. pic.twitter.com/yE5UbbiFTC
— anand mahindra (@anandmahindra) July 31, 2022