தமிழ் பாடல் பின்னணியில்.. பட்டையை கிளப்பிய நெல்லை சிறுவன்.. அசந்து போய் வீடியோவை பகிர்ந்த ஆனந்த் மஹிந்திரா.. பின்னணி என்ன??

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Ajith Kumar V | Aug 09, 2022 08:45 PM

இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான ஆனந்த் மஹிந்திரா, தொழிலில் ஒரு பக்கம் எந்த அளவுக்கு தீவிரமாக இயங்கி வருகிறாரோ, அதே அளவில் ட்விட்டரிலும் ஆக்கப் பூர்வமாக இயங்கக் கூடியவர்.

Anand mahindra share tamilnadu boy video netizens react

Also Read | "அந்த வாழ்க்கை'ல நான் பாத்தது.." இறப்பில் இருந்து திரும்பி வந்த பெண்கள்??.. "அவங்க சொன்னத கேட்டு ஒரு நிமிஷம் அள்ளு விட்டுருச்சு!!"

அடிக்கடி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், இணையவாசிகளுக்கு தேவையான தொழில் மற்றும் டெக்னாலஜி தொடர்பான செய்திகள் மற்றும் வீடியோக்கள், தங்களின் திறனை வெளிப்படுத்தி புது விதமான முயற்சிகளை மேற்கொள்ளும் வீடியோக்கள், நெட்டிசன்கள் கேட்கும் கேள்விகளுக்கு பயன்படும் வகையில் தனது பதில்களை தெரிவித்து வருவதை ஆனந்த் மஹிந்திரா வழக்கமாக கொண்டுள்ளார்.

இவற்றுள் குறிப்பாக, அடையாளம் தெரியாத நபராக இருந்தாலும், அவர்களின் அசாத்திய திறனை பாராட்டும் வகையில், ஆனந்த் மஹிந்திரா அடிக்கடி செய்யும் ட்வீட்கள், சம்மந்தப்பட்ட நபரை மக்கள் மத்தியில் அதிகம் பாராட்டுக்களையும் பெறச் செய்யும்.

இந்நிலையில், தமிழ்நாட்டை சேர்ந்த சிறுவன் செய்த சாகசம் தொடர்பாக ஆனந்த் மஹிந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோ ஒன்று, தற்போது அதிகம் வைரலாகி வருகிறது. சமீபத்தில் இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில், இந்திய அணி ஏராளமான பதக்கங்களை வென்று, நான்காவது இடத்தை பிடித்து பல்வேறு சாதனைகளையும் புரிந்திருந்தது.

அந்த வகையில், தற்போது ஒரு வீடியோவை பகிர்ந்துள்ள ஆனந்த் மஹிந்திரா, அதனை காமன்வெல்த் போட்டிகளுடன் ஒப்பிட்டு பகிர்ந்துள்ளார். இதற்கு காரணம், அவர் பகிர்ந்த வீடியோவில், சிறுவன் ஒருவன் Back flip மற்றும் twist flip என அடித்து, மிகவும் அற்புதமாக சென்று நிற்பது தான். தமிழ்நாட்டின் திருநெல்வேலி பகுதியில் உள்ள சாலை ஒன்றில் இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.

Anand mahindra share tamilnadu boy video netizens react

சிறுவனின் அசாத்திய திறமை கொண்ட வீடியோவை கண்டு அசந்து போன ஆனந்த் மஹிந்திரா, இது தொடர்பாக தமிழ் பாடலுடன் கூடிய வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும், தனது கேப்ஷனில், "காமன்வெல்த் போட்டியில், இந்தியா தங்க வேட்டை நடத்திய பிறகு, அடுத்த தலைமுறை திறமைகள் உருவாகி வருகின்றன. அதிகம் ஆதரவு கிடைக்காத சிறுவனின் திறமையை நாம் வேகமான பாதையில் முன்னெடுத்து செல்ல வேண்டும். (திருநெல்வேலிக்கு அருகே இந்த சிறுவனை பார்த்த எனது நண்பர் ஒருவர் இந்த வீடியோவை பகிர்ந்தார்)" என ஆனந்த் மஹிந்திரா குறிப்பிட்டுள்ளார்.

திறமை எங்கு இருந்தாலும் அதனை பாராட்ட தவறாத ஆனந்த் மஹிந்திரா, திருநெல்வேலி பகுதியில் உள்ள சிறுவனின் திறமையை கண்டு வியந்து போய் பதிவிட்ட ட்வீட், தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

 

Also Read | "இவங்க 2 பேருக்குமே தங்கப்பதக்கம் கொடுக்கணும்".. பாகிஸ்தான் வீரரின் பதிவில் நீரஜ் சோப்ரா போட்ட கமெண்ட்.. நெகிழ்ந்துபோன ஆனந்த் மஹிந்திரா..!

Tags : #ANAND MAHINDRA #ANAND MAHINDRA SHARE TAMILNADU BOY VIDEO

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Anand mahindra share tamilnadu boy video netizens react | India News.