"தாய்ப்பால் கொடுத்துட்டு இருக்குறப்போ.." இளம்பெண்ணுக்கு நேர்ந்த துயரம்..
முகப்பு > செய்திகள் > இந்தியாதாய்ப்பால் கொடுத்து கொண்டிருக்கும் போது, இளம் பெண் ஒருவருக்கு நேர்ந்த சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தெலங்கானா மாவட்டம், திருமலாபூர் என்னும் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயஸ்ரீ. 25 வயதாகும் இவருக்கு, ஏற்க்கனவே திருமணமான நிலையில், கடந்த இரண்டு மாதங்களுக்கு பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
இந்நிலையில், குழந்தை பிறந்த பிறகு, ஜெயஸ்ரீயின் உடல் நிலை சற்று மோசமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால், மனைவி ஜெயஸ்ரீயை அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கணவர் பிரசாந்த் அழைத்துச் சென்றுள்ளார். அங்கு ஜெயஸ்ரீயை பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து மருந்துகள் எடுத்துக் கொண்டாலே சரியாகி விடும் என்றும் கூறி உள்ளனர்.
அப்படி இருக்கும் நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன், தனது குழந்தைக்கு ஜெயஸ்ரீ தாய்ப்பால் கொடுத்து கொண்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது. அந்த சமயத்தில் யாரும் எதிர்பார்க்காத ஒரு அதிர்ச்சி சம்பவம் அங்கே அரங்கேறி உள்ளது. தாய்ப்பால் கொடுத்து கொண்டிருந்த ஜெயஸ்ரீயை தேநீர் அருந்த அவரது உறவினர்கள் அழைத்துள்ளனர்.
ஆனால், ஜெயஸ்ரீ அங்கே இருந்து வரவில்லை என்றும் கூறப்படுகிறது. அப்போது தான், குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்துக் கொண்டிருக்கும் போதே மாரடைப்பு ஏற்பட்டு ஜெயஸ்ரீ இறந்து போனதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இந்த சம்பவத்தால், ஜெயஸ்ரீயின் உறவினர்கள் அனைவரும் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
பிறந்து இரண்டு மாதமே ஆகும் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்து கொண்டிருந்த போது, தாய்க்கு நேர்ந்த சம்பவம் அப்பகுதியில் உள்ள பலரையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

மற்ற செய்திகள்
