பணிச்சுமையால் உயிரிழந்த 'ஆம்புலன்ஸ்' டிரைவர்... கணவரின் 'இறுதி' சடங்கிற்காக... 'தாலி'யை அடகு வைத்த 'மனைவி'!
முகப்பு > செய்திகள் > இந்தியாகர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் உமேஷ் ஹடகள்ளி. இவர் அந்த மாநிலத்தில் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநராக பணிபுரிந்து வரும் நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக கொரோனாவின் அவசரப்பணி காரணமாக இடைவிடாது பணிபுரிந்து வந்துள்ளார்.
இதனால் மாரடைப்பின் காரணமாக அவர் உயிரிழந்துள்ளார். பணமில்லாமல் அவதிப்பட்டு வந்த உமேஷின் மனைவி தனது தாலியை அடகு வைத்து கணவரின் இறுதி சடங்கை செய்துள்ளார். கொரோனா பணியில் இருந்த ஆம்புலன்ஸ் ஊழியரின் மனைவி, தனது தாலியை அடகு வைத்து இறுதிச்சடங்கு செய்த தகவல் இணையதளங்களில் பரவ தொடங்கியது.
இதையடுத்து, 12 மற்றும் 7 வயதில் இருக்கும் தனது 2 குழந்தைகளுக்கு அரசு உதவி செய்ய வேண்டும் என்று உமேஷின் மனைவி முறையிட்டிருந்ததை தொடர்ந்து, அவருக்கு 5 லட்ச ரூபாய் நிவாரண தொகையாக வழங்கப்படும் என கர்நாடக முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
கணவர் உமேஷின் மரணம் குறித்து அவரது மனைவி, 'ஊரடங்கு ஆரம்பித்த நாள் முதல் எனது கணவர் ஓய்வின்றி இடைவிடாமல் கொரோனா பணிகளை செய்து வந்தார். இதனால் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. அப்போது மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில், அவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். எங்கள் குடும்பத்திற்கு அரசு வேலை வழங்கி உதவிட வேண்டும்' என தெரிவித்தார். கடந்த மூன்று மாதங்களாக கணவருக்கு சம்பளம் கிடைக்கவில்லை என அவரது மனைவி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.