இனிமே 'வீட்டுல' தனிமைப்படுத்த மாட்டோம்... கண்டிப்பா 'இங்க' தான் போகணும்: சென்னை மாநகராட்சி ஆணையர்
முகப்பு > செய்திகள் > தமிழகம்வீட்டில் தனிமைப்படுத்தும் திட்டம் ரத்து செய்யப்பட்டு இருப்பதாக சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்து உள்ளார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சென்னை மாநகராட்சி வளாகத்தில் ஆணையர் பிரகாஷ் உள்ளிட்ட அதிகாரிகளுடன் சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் ஆலோசனை நடத்தினார்.
ஆலோசனைக்குப் பின் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், '' சென்னையில் கொரோனா அறிகுறி உடையவர்களை வீடுகளில் தனிமைப்படுத்தும் திட்டம் ரத்து செய்யப்படுகிறது. கொரோனா உறுதிப்படுத்தப்பட்ட நபர்கள் இனி அரசின் முகாம்களில் தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தொற்று பாதித்தவருடன் தொடர்பில் இருந்தவர்களை வீட்டில் தனிமைப்படுத்துதலை ரத்து செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. வீட்டில் ஒருவருக்கு கொரோனா என்றால் மொத்த குடும்ப உறுப்பினர்களும் முகாமிற்கு அழைத்துச் செல்லப்படுவர்,'' என்றார்.

மற்ற செய்திகள்
