அவர் கூட ‘கம்ப்பேர்’ பண்றத நிறுத்துங்க.. ‘அடுத்த தோனி’ சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த இளம்வீரர்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Sep 30, 2020 01:22 PM

தோனியை போல் யாராலும் விளையாட முடியாது, அவரை போல் விளையாட முயற்சிக்கவும் முடியாது என இளம்வீரர் சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார்.

No one can try to play like MS Dhoni, says Sanju Samson

ஐபிஎல் தொடரில் இளம் வீரர் சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் விளையாடி வருகிறார். இவர் சென்னைக்கு எதிரான போட்டியில் 74 ரன்களும், பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் 85 ரன்களும் அடித்து ராஜஸ்தான் அணிக்கு வெற்றியை தேடி தந்தார். இந்த நிலையில் கேரளாவை சேர்ந்த சசிதரூர் எம்.பி, சஞ்சு சாம்சனை இந்தியாவின் அடுத்த தோனி என பாராட்டியிருந்தார்.

No one can try to play like MS Dhoni, says Sanju Samson

இதுகுறித்து கூறிய சஞ்சு சாம்சன், ‘தோனியை போல் யாராலும் விளையாட முடியாது. அவரை போல் விளையாட முயற்சிக்கவும் முடியாது என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். அதனால் தோனியுடன் ஒப்பிடுவதை நிறுத்துங்கள். தோனியை போல் விளையாடியதாக நான் ஒருபோதும் நினைத்ததில்லை. தோனி இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான். நான் எனது ஆட்டத்தில் மட்டுமே கவனம் செலுத்துகிறேன். என்னால் எப்படி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும்?, எப்படி ஆட்டத்தை வென்று தர முடியும்? என்பதை மட்டுமே நான் சிந்திக்கிறேன்’ என அவர் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. No one can try to play like MS Dhoni, says Sanju Samson | Sports News.