ARMAAN MALIK : ஒரே நேரத்தில் இரண்டு மனைவிகளும் கர்ப்பம்.. போட்டோ ஷூட் எடுத்து வெளியிட்ட யூடியூப் பிரபலம்.!
முகப்பு > செய்திகள் > இந்தியாHyderabad : ஹைதராபாத்தைச் சேர்ந்த அர்மான் மாலிக் என்பவர் தன் கர்ப்பிணி மனைவிகளுடன் எடுத்துக்கொண்ட ஃபோட்டோஷூட் புகைப்படங்கள் தான் தற்போது வைரலாகி வருகின்றன.

அர்மான் மாலிக் ஒரு youtube சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். லைப் ஸ்டைல் பற்றிய விஷயங்களை தினந்தோறும் தம்முடைய யூடியூபில் கண்டென்டுகளாக பதிவிடக்கூடிய அர்மான் மாலிக் 20 லட்சத்திற்கும் அதிகமான சப்ஸ்கிரைபர்களை தனது யூடியூப் சேனலில் வைத்திருக்கிறார். கடந்த 2011-ஆம் ஆண்டு பாயல் மாலிக் என்பவரை இவர் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சிராயு மாலிக் என்கிற மகன் உள்ள நிலையில், கடந்த 2018 ஆம் ஆண்டு பாயல் மாலிக்கின் தோழியான கிருத்திகா என்பவரை அர்மான் மாலிக் காதல் திருமணம் செய்து கொண்டிருக்கிறார்.
இதனை தொடர்ந்து இரண்டு மனைவிகளுடனும் ஒரே வீட்டில் ஒன்றாக வசித்து வரக்கூடிய அர்மான் மாலிக் அண்மையில் தம்முடைய இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார். அந்த பதிவில் தன்னுடைய இரண்டு மனைவிகளும் ஒரே நேரத்தில் கர்ப்பமானதாக அறிவித்திருந்த அவர் இரண்டு பேருடனும் நடத்திய போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.
இரண்டு மனைவிகளும் ஒரே நேரத்தில் கர்ப்பமானத்துடன், ஒரே நேரத்தில் அவர்களுடன் எடுத்துக் கொண்ட போட்டோ ஷூட்டை அர்மான் மாலிக் பதிவிட்டிருக்கக் கூடிய இந்த இன்ஸ்டாகிராம் பதிவு வைரலாகி வருகிறது.
இதனை தொடர்ந்து பலரும் இந்த மகிழ்ச்சியான குடும்பத்துக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் ட்ரெண்ட் ஆகி வருகின்றன.

மற்ற செய்திகள்
