எல்லாத்துக்கும் 'கேப்டன்' தான் காரணமா?... 'புதுமை'யான பயிற்சியில் ஈடுபட்ட இந்திய வீரர்கள்... 'வீடியோ' உள்ளே!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Manjula | Jan 29, 2020 01:31 AM

இன்று ஹாமில்டனில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையேயான 3-வது டி20 போட்டி நண்பகல் 12.30 மணிக்கு நடைபெறவுள்ளது. முதல் இரண்டு போட்டிகளில் இந்தியா வென்றதால் இன்று நடைபெறும் போட்டி தொடரை வெல்லும் போட்டியாக மாறியுள்ளது.

IND Vs NZ: Team India\'s Unique Practice session Video here

போட்டியை வென்று தொடரை கைப்பற்றும் முனைப்புடன் இந்திய அணியும், தொடரை அவ்வளவு எளிதில் விட்டு விடக்கூடாது என்ற முனைப்புடன்நியூசிலாந்து அணியும் கடுமையாக மோதும். இதனால் இந்த போட்டியில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்திய வீரர்கள் நேற்று புதுமையான ஒரு பயிற்சியில் ஈடுபட்டனர். அதில் பந்தை வைத்துக்கொண்டு மாறிமாறி தூக்கிப்போட சக வீரர்கள் அதை ஒரு கையால் கேட்ச் பிடிக்கின்றனர். சில வீரர்கள் பந்தை பிடிக்க விடாமல் தடுக்க, அதையும் மீறி போட்டிபோட்டு வீரர்கள் ஒரு கையால் கேட்ச் பிடிப்பது போல அந்த வீடியோ உள்ளது.

2-வது டி20 போட்டியில் பும்ரா பந்தில் எளிமையான கேட்ச் ஒன்றை இந்திய கேப்டன் விராட் கோலி தவற விட்டார். இதையடுத்து கைகளால் அவர் தனது முகத்தை மூடிக்கொள்ளும் புகைப்படங்கள் வைரலாகின. ஒருவேளை அதனால் தான் இந்திய வீரர்கள் இந்த பயிற்சியில் ஈடுபடுகிறார்களோ? என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.