மேட்ச் வேணா தோத்திருக்கலாம்.. ஆனா நேத்து ‘கோலி’ படைச்ச சாதனை ரொம்ப பெருசு.. சர்ப்ரைஸ் ‘கிஃப்ட்’ கொடுத்து அழகு பார்த்த ஏபி டிவில்லியர்ஸ்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலிக்கு ஏபி டிவில்லியர்ஸ் கொடுத்த சர்ப்ரைஸ் கிஃப்ட் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.
ஐபிஎல் (IPL) தொடரின் 31-வது லீக் போட்டி நேற்று அபுதாபி மைதானத்தில் நடைபெற்றது. இதில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் (RCB), இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் (KKR) மோதின. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 92 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதில் அதிகபட்சமாக அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் தேவ்தத் படிக்கல் 22 ரன்கள் எடுத்திருந்தார்.
இதனை அடுத்து விளையாடிய கொல்கத்தா அணி, 10 ஓவர்களில் 94 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. கொல்கத்தா அணியைப் பொறுத்தவரை தொடக்க ஆட்டக்காரர்களான சுப்மன் கில் 48 ரன்களும், வெங்கடேஷ் ஐயர் 41 ரன்களும் எடுத்தனர். கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் தோல்வி அடைந்திருந்தாலும், பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி (Virat Kohli) சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
இது பெங்களூரு அணிக்காக விராட் கோலி விளையாடும் 200-வது போட்டியாகும். இப்போட்டியில் விளையாடியதன் மூலம், ஐபிஎல் வரலாற்றில் ஒரே அணிக்காக 200 போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார்.
Game Day: KKR v RCB Dressing Room Talk
Mike Hesson and Virat Kohli address the team after a forgettable outing, urge them to put this loss behind them & turn up better for the next game v CSK on 24th. All this & more on @myntra presents Game Day.#PlayBold #IPL2021 #KKRvRCB pic.twitter.com/6bB0LcfSe3
— Royal Challengers Bangalore (@RCBTweets) September 21, 2021
இந்த நிலையில், விராட் கோலியின் சாதனையை பாராட்டும் விதமாக, பெங்களூரு அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஏபி டிவில்லியர்ஸ் (AB de Villiers) ‘200’ என பதித்த ஆர்சிபி ஜெர்சியை விராட் கோலிக்கு பரிசாக வழங்கினார். பெங்களூரு அணி தங்களது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கு இந்த வீடியோ ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.