VIDEO: முதல்வர் காரை பின்தொடர்ந்து சென்ற கான்வாய் கார்கள் மோதி விபத்து.. பரபரப்பு காட்சிகள்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்முதல்வர் பழனிசாமி வாகனத்துக்கு பின்னால் அணிவகுத்துச் சென்ற கான்வாய் கார்கள் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மறைந்த முன்னாள் சபாநாயகர் பி.எச். பாண்டியனின் சொந்த ஊரான சேரன்மகாதேவி அருகே உள்ள கோவிந்தபேரியில் அவரது நினைவாக 20 சென்ட் பரப்பளவில் மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு அவரது திருவுருவச்சிலையும் நிறுவப்பட்டுள்ளது. இந்த மணிமண்டபம் மற்றும் சிலையை இன்று திறந்து வைக்க தமிழக முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சென்றனர்.
சாலையில் முதல்வர் பழனிசாமி வாகனத்துக்கு பின்னால் கான்வாய் வாகனங்கள் அணிவகுத்து சென்றன. அப்போது எதிர்பாராதவிதமாக முன்னால் சென்ற கார் மீது மற்றொரு கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரின் முன்பக்கம் சேதமடைந்தது. உடனே விரைந்து வந்த போலீசார், அந்த வாகனத்தை சாலையில் இருந்து நகர்த்தி மற்ற வாகனங்கள் செல்வதற்கு வழிவகை செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மற்ற செய்திகள்
