‘கட்டுப்பாட்டை இழந்து வயலில் கவிழ்ந்த லாரி’.. கூட்டம் கூட்டமாக குடத்துடன் ஓடி வந்த மக்கள்.. தருமபுரி அருகே பரபரப்பு..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்விபத்தில் கவிழ்ந்த லாரியில் இருந்து மக்கள் குடம் குடமாக எண்ணெயை பிடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஓசூரில் இருந்து தருமபுரி நோக்கி லாரி ஒன்று சமையல் எண்ணெயை ஏற்றிக் கொண்டு சென்றுள்ளது. காடுசெட்டிப்பட்டி பகுதியில் லாரி வந்துகொண்டிருந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்துள்ளது. இதனால் சாலையோரம் உள்ள விவசாய நிலத்தில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரியில் இருந்த சமையல் எண்ணெய் முழுவதும் விவசாய நிலத்தில் கொட்டியுள்ளது.
இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து குடங்களில் எண்ணெயை பிடித்துச் சென்றனர். இந்த விபத்தில் லாரி ஓட்டுநர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத்துறையினர் லாரியை மீட்டனர். விபத்துக்குள்ளான சமையல் எண்ணெய் லாரியில் மக்கள் குடங்களில் எண்ணெயை எடுத்தச் சென்ற சம்பவத்தால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மற்ற செய்திகள்
