'இப்படி நடந்த என்ன தான் பண்ணுவாங்க?...இப்படியா கேட்ச் புடிச்சு அவுட் பண்றது'...வைரலாகும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > தமிழ்

By Jeno | Mar 01, 2019 03:45 PM

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீராங்கனை வீழ்த்திய வித்தியாசமான விக்கெட் தற்போது வைரலாகி வருகிறது.

Australia women’s cricketer completes one of the most bizarre

சிட்னியில் நேற்று நியூசிலாந்து மகளிர் அணியும்,ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் லெவன் அணியும் மோதிய ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதில் நியூசிலாந்து அணி பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது, ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் ஹீதர் கிரஹாம். 45 வது ஓவரை வீசினார்.அவரது பந்தை பெர்கின்ஸ் எதிர்கொண்டார்.அவருக்கு எதிர்முனையில் கேத்தே மார்டின் நின்றுகொண்டிருந்தார்.

கிரஹாம் பந்தை வீச, அடித்தார் பெர்கின்ஸ். அந்த பந்து நேராக எதிர்முனையில் நின்ற மார்டினின் பேட்டில் பட்டு உயரே பறந்தது. அதை லாவக மாக பிடித்த கிராஹம், அவுட் என்று கத்தினார். என்ன நடந்தது என்று தெரியாமல் கேத்தே மார்டினும் பெர்கின்ஸும் ஆச்சரியத்தில் நிற்க, அவுட் கொடுத்தார் நடுவர்.

இந்த வித்தியாச அவுட் வீடியோவை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ட்விட்டரில் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வைர லாகி வருகிறது.

Tags : #CRICKET #TWITTER #AUSTRALIA WOMEN’S CRICKET