'திரும்பி வருவார்'.. நடந்த சோகம் தெரியாமல் நம்பிக்கையுடன் காத்திருக்கும் நாய்.. நெகிழவைத்த போட்டோ!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Arunachalam | Mar 18, 2019 04:37 PM

தன்னை வளர்த்த உரிமையாளர் இறந்தது தெரியாமல் ஒரு வாரமாக மருத்துவமனை வாசலில் காத்திருக்கும் டோடோ என்கிற நாய் இணையத்தில் பிரபலமாகியுள்ளது..

dog waits for its owner in front of hospital goes heartwarming

இங்கு உள்ள பப்லோ சொறியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தன் உரிமையாளர் இறந்து போனது தெரியாமல் ஒரு வாரத்துக்கும் மேலாக மருத்துவமனை வாசலில் அவருக்காக காத்திருக்கும் அவரது வளர்ப்பு நாயான டோடோ என்கிற  நாய் பார்ப்பவர்களுக்கு  வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனை அறிந்த விலங்குகள் பாதுகாப்பு நல நிறுவனம் ஒன்று, நாயின் உரிமையாளர் இறந்து போன பின்பு, அவரது உறவினர்கள் யாரும், நாய் டோடோவை அக்கறையுடன் வந்து அழைத்து செல்லாததால் டோட்டோவிற்கு புதிய உரிமையாளர் தேவை என்று கேட்டுக்கொண்டுள்ளது.

ஆனால் டோடோ மீண்டும்  தன் உரிமையாளரின் நினைவாக மருத்துவமனைக்கு சென்றுவிட வாய்ப்பு இருப்பதால், நாய்க்கு  மிகவும் பாதுகாப்பான, அதே சமயம் அன்பான இடம் தேவை என்றும் டோடோவின் உடலில் ஏற்பட்ட காயத்திற்கு முதலுதவி தேவை என்றும்  அந்த விலங்குகள் பாதுகாப்பு நல நிறுவனத்தை சேர்ந்த உறுப்பினரான பாத்திமா என்பவர் கூறியுள்ளார்.

Tags : #DOGHEARTWARMING #EMOTIONAL