ஒரு 'பூஜ்யம்' அதிகமாகிருச்சு... பணத்தை அக்கவுண்ட்ல 'தப்பா' போட்டுட்டோம்... நிவாரண நிதியை 'திருப்பி' குடுங்க!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Manjula | May 19, 2020 04:42 PM

மழை, வெள்ளத்தின்போது அளித்த நிவாரண நிதியை சுமார் 97 பேர் திரும்ப கேட்டுள்ளனர்.

97 persons asked CM Flood relief fund in Kerala, Details

கடந்த 2018-ம் ஆண்டு கேரளா கடுமையான மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. மாநில அரசு, அதிகாரிகள், தேசிய பேரிடர் மீட்பு படை, ராணுவ வீரர்கள் மற்றும் தன்னார்வலர்கள் என பலரும் இணைந்து கேரள மக்களை வெள்ளத்தில் இருந்து மீட்கும் பணியில் இடைவிடாது ஈடுபட்டனர். மாநிலத்தை புரட்டிப்போட்ட இந்த வெள்ளத்தில் லட்சக்கணக்கான மக்கள் முகாம்களில் தங்கும் நிலை உருவானது.

இந்தியா மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளில் வசித்தவர்களும் கேரள அரசுக்கு தங்களால் இயன்ற நிதியை அளித்தனர். இதற்காக ஆன்லைனில் வசதி ஏற்படுத்தப்பட்டு இருந்தது. இந்த நிலையில் வெள்ளத்தின்போது தாங்கள் வழங்கிய நிவாரண நிதியைத் திரும்ப வழங்க வேண்டும் எனக் கேட்டு 97 பேர் விண்ணப்பித்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 97 பேரும் திருப்பிக் கேட்கும் தொகை 55.18 லட்சம் ரூபாய்.

பணத்தைத் திருப்பிக் கேட்பவர்கள் தங்கள் விண்ணப்பத்தில் அதற்கான காரணத்தையும் கூறியுள்ளனர். அதாவது தவறுதலாக பணத்தை அளித்து விட்டதாகவும், ஒரு பூஜ்யம் அதிகமாகி விட்டது என்றும் அதுபோக மீதப்பணத்தை அளிக்கும்படியும் காரணம் தெரிவித்து இருக்கின்றனர். வழக்கமாக இதுபோல நிவாரண நிதியை திரும்ப அளிப்பது இல்லை என்றாலும் இவர்களுக்கு கேரள அரசு பணத்தை திரும்ப அளிக்க இருப்பதாக கூறப்படுகிறது.