'அதிரடியாக உயர்த்தப்பட்ட ராயல் என்ஃபீல்டு பைக்குகளின் விலை'... எந்தெந்த மாடல்களுக்கு என்ன விலை?

முகப்பு > செய்திகள் > வணிகம்

By Jeno | Apr 14, 2021 06:32 PM

ராயல் என்ஃபீல்டு பைக்குகளின் விலை கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது.

Royal Enfield\'s 350 cc Motorcycles Get A Significant Price Hike

வயதானவர்கள் முதல் இளசுகள் வரை பலரது விருப்பமான பைக்குகளில் ஒன்றாக இருப்பது ராயல் என்ஃபீல்டு. 350 சிசி கொண்ட ராயல் என்ஃபீல்டு பைக்குகளின் விலை கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தனது பைக்குளின் விலையில் 3,000 ரூபாயை உயர்த்தியது.

அதனைத்தொடர்ந்து ஹிமாலயன் 650 சிசி அப்டேட் வெர்ஷன் பைக்குகளின் விலையும் அதிகரிக்கப்பட்ட நிலையில், தற்போது விலையேற்றம் செய்யப்பட்ட பைக்குகளின் விலைப் பட்டியலை வெளியாகியுள்ளது. புல்லட் 350 பைக்கின் விலை 7,000 முதல் 13,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது. கிளாசிக் 350 பைக்கின் விலை 10,000 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. Meteor350 ரக பைக்கின் விலையில் 6,000 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. 

Royal Enfield's 350 cc Motorcycles Get A Significant Price Hike

கடந்த பிப்ரவரி மாதம் புதிய நிறங்களில் வெளிவந்த Interceptor 650, Continental GT 650 பைக்குகளின் விலையும் 2,75,467லிருந்து 313,367 ஆக உயர்ந்துள்ளது. கடந்த ஜனவரி மாதத்தில் அறிவிக்கப்பட்ட இந்த வாகனத்தின் விலையில் (வாகனங்களின் ரகங்களைப் பொறுத்து) 6,000 ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று 2021-ஆம் ஆண்டுக்கான ஹிமாலயன் அப்டேட் வெர்ஷன் கடந்த பிப்ரவரி மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் விலை 2.01 லட்சத்திலிருந்து தொடங்குகிறது.

Royal Enfield's 350 cc Motorcycles Get A Significant Price Hike

கிளாசிக் 350 (Dual-Channel ABS) - ரூ2,05,004

புல்லட் - ரூ 1,61,385

புல்லட் 350 இ.எஸ் - ரூ1,77,342

மீடிஒர் 350 (பையர் பால்)- ரூ2,08,751

மீடிஒர் 350 ( ஸ்டெல்லார்) - ரூ2,15,023

மீடிஒர் 350 ( சூப்பர் நோவா) -ரூ 2,25,478

மற்ற செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Royal Enfield's 350 cc Motorcycles Get A Significant Price Hike | Business News.