'டைவர்ஸ் கொடுங்க சார்...' 'தரேன், ஆனா மொதல்ல இத பண்ணுங்க...' - வித்தியாசமான தீர்ப்பை கேட்டு ஆடி போன கணவன்...!
முகப்பு > செய்திகள் > உலகம்சீனாவின் தலைநகரமான பெய்ஜிங்கில் நீதிமன்றத்தில் கடந்த 2015ஆம் ஆண்டு திருமணமான தம்பதிகள் விவாகரத்துக்காக பெய்ஜிங்கில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

நீதிமன்றம் கொடுத்த தகவல்படி, கணவர் சென் என்ற நபர் தனது மனைவி வேங்கிடம் இருந்து விவாகரத்துக்கோரி நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளார். முதலில் விவாகரத்து தர மறுத்த வேங் பிறகு தனக்கு பொருளாதார ரீதியான உதவிவேண்டும் என்று கூறி விவாகரத்துக்கு ஒப்புக்கொண்டுள்ளார்.
அதுமட்டுமில்லாமல், வேங் திருமணமானதிலிருந்து தன் கணவர் சென் தனக்கு வீட்டுவேலைகளிலும், மகனைப் பார்த்துக்கொள்வதிலும் எந்தவொரு உதவியும் செய்ததில்லை என்று கூறி வாதிட்டிருக்கிறார்
இதுகுறித்து மேலும் விசாரணை செய்த பெய்ஜிங் மாகாணத்திற்கு உட்பட்ட ஃபாங்ஷான் மாவட்ட நீதிமன்றம், வேங்கிற்கு மாதந்தோறும் ஜீவனாம்சமாக 2000 யுவான் கொடுக்கவேண்டும் எனவும், இதற்குமுன்பு செய்த வீட்டு வேலைகளுக்காக மொத்தமாக 50000 யுவான் கொடுக்க வேண்டும் என்ற நிபந்தனையுடம் ஒரு வித்தியாசமான விவாகரத்து கொடுத்து தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பு குறித்து பத்திரிகையாளர்களிடம் கூறிய தலைமை நீதிபதி, 'திருமணத்திற்குப்பிறகு ஒரு தம்பதியினருக்கு இருக்கும் சொத்துகள் அனைத்தையுமே இரண்டாக பிரித்துக்கொள்ளலாம். ஆனால் இதுபோன்ற கணக்கிடப்படாத வேலைகளும் மதிப்புப்பெறும் சொத்துகளே' எனத் தெரிவித்துள்ளார்.
இந்த வித்யாசமான விவாகரத்து சம்பவம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி, பலர் இது மிகவும் குறைவான தொகை என தங்கள் கருத்தை தெரிவித்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்
