'வேற லெவல் ரெக்கார்டு'.. 'இருபத்தி மூன்றே நாட்களில்'... 'எங்க கிட்டயும் ஆள் இருக்கார்ல'.. 'தெறிக்கவிட்ட' இந்தியர்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Sep 30, 2019 05:17 PM

இன்றைய டிஜிட்டல் தொழில்நுட்ப உலகத்தில், ஒரு வெப்சைட் தொடங்கிய குறுகிய காலத்திலோ, தொடர்ச்சியான பல ஆண்டுகளிலோ பலரின் ஏகோபித்த அபிமானங்களைப் பெறுவதென்பது அத்தனை எளிதான ஒன்று அல்ல.

Delhi man Sets record, his site with 32 Cr Pages in 23 days

நம்பிக்கையான நிர்வாகங்கள், அறமதிப்பீடுகளுடன் கூடிய தொழில்முறை நேர்த்தி, தொடர்ந்து சந்தையில் தன்னை தக்கவைத்துக்கொள்ளும்படியான தயாரிப்புகள் உள்ளிட்ட பலவற்றையும் அந்தந்த நிறுவனங்கள் ஒவ்வொரு நொடியும் இணையதளத்தின் மூலமே சந்தித்து வருகின்றன.

முதலீடுகளும், வியாபாரத் தொடர்புகளும், நிறுவனத்தின் தொடர் ஏறுமுக அல்லது இறங்குமுக விகிதம் உட்பட ஒரு நொடியில் எல்லாம் தெரிந்துவிடும் சுமுகமாக நிலையினை இன்றைய தொழில்நுட்பம் சாத்தியப்படுத்தியிருப்பதால், இங்கு போட்டியும் முதன்மையாகவும் அவசியமாகவும் கருதப்படுகிறது.

இத்தகைய நெருக்கடிகளை சமாளித்து, டெல்லியைச் சேர்ந்த அமித் ஷர்மா என்பவர்,  Cheapflightsall.com என்கிற இணையதளத்தை 32 கோடி பக்கங்களுடன் 23 நாட்களிலேயே உருவாக்கி சாதித்துள்ளார். மொத்தம் 5 டி.பி அளவிற்கு உருவாக்கப்பட்டுள்ள இந்த இணையதள முகவரியை, விமானப் போக்குவரத்து வசதிகளுடன் கூடிய 159 நாடுகளில் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : #WEBSITE #ACHIEVEMENT #AMIT SHARMA