22 வருஷம் முன்னாடி காணாமல் போன நகைங்க - அப்பவே அவ்ளோ ரூபா.. இப்போ... இந்தியக் குடும்பத்துக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கோர்ட்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாபேஷன் துறையில் சரக் தின்-ஐ தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. மும்பையில் இயங்கிவரும் இந்த பிரபல ஆடை விற்பனையகத்தை துவங்கியவர் அர்ஜன் தஸ்வாணி. இவரது வீட்டில் கடந்த 1998 ஆம் ஆண்டு மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகளை மீண்டும் தஸ்வாணி குடும்பத்தினரிடமே ஒப்படைக்கும்படி கோர்ட் தற்போது உத்தரவிட்டுள்ளது. காணாமல்போன போது அந்த தங்க நகைகளின் மதிப்பு 13 லட்சம் ஆகும். ஆனால் அவற்றின் தற்போதைய மதிப்பு 8 கோடி ரூபாய் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொள்ளை
1998 ஆம் ஆண்டு மே மாதம் 8 ஆம் தேதி, அடையாளம் தெரியாத நபர்கள் அர்ஜன் தஸ்வாணியின் வீட்டிற்குள் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் நுழைந்துள்ளனர். அப்போது வீட்டில் இருந்த தஸ்வாணி மற்றும் அவரது மனைவியைத் தாக்கிய கொள்ளையர்கள், வீட்டில் இருந்த தங்க நகைகளை தூக்கிச் சென்றுள்ளனர். பின்னர், இதுகுறித்து காவல்துறையில் தஸ்வாணி புகாரளித்திருக்கிறார்.
விசாரணையில் வழக்கில் சம்பத்தப்பட்ட 3 கொள்ளையர்களை பிடித்த காவல்துறை அவர்களிடமிருந்த நகைகளைக் கைப்பற்றி நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது. மேலும், அந்த மூன்று பேரின் மீதும் வழக்கு பதியப்பட்டு தண்டனை கொடுத்தது நீதிமன்றம். ஆனால், இந்த கொள்ளைக் கும்பலில் தலைமறைவான 3 பேர் குறித்து இன்றுவரை எவ்வித தகவல்களோ தடயங்களோ இல்லை.
வம்பிழுத்த தென்னாப்பிரிக்க வீரர் - தன்னுடைய ஸ்டைலில் ரிவெஞ்ச் எடுத்த பூம்..பூம்..பும்ரா - வீடியோ..!
புது சிக்கல்
மாயமான 3 கொள்ளையர்களைப் பிடிக்க காவல்துறை தொடர்ந்து முயற்சித்து வந்ததால் வழக்கும் ஜவ்வென இழுத்திருக்கிறது. அந்நிலையில் தஸ்வாணி 2007 ஆம் ஆண்டு மரணமடையவே நகைகளை ஒப்படைப்பது குறித்த விவாதங்கள் மேலும் சிக்கலாகின.
அநீதி
வெகுநாட்களாக நடைபெற்றுவந்த இந்த வழக்கில் கடந்த 5 ஆம் தேதி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதில், “இத்தனை நாட்கள் திருடு போன நகையை அந்த குடும்பத்திடம் வழங்காதது அவர்களுக்கு இழைக்கப்பட்ட பெரிய அநீதி. ஆகவே உடனடியாக இந்த நகைகளை அக்குடும்பத்தினருக்கு வழங்க வேண்டும்” எனத் தீர்ப்பளிக்கப்பட்டது.
நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து விக்ட்டோரியா மகாராணி உருவம் பொறித்த தங்க நாணயம், 1300 கிராம் தங்க கட்டி மற்றும் 200 மில்லி கிராம் தங்க கட்டி, 2 தங்க பிரேஸ்லெட் ஆகியவை திருப்பி அர்ஜன் தஸ்வாணியின் மகன் ராஜு தஸ்வாணியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த நகைகளின் மதிப்பு 1998 ஆம் ஆண்டு 13 லட்சம் ரூபாயாக இருந்தது. ஆனால் தற்போது அந்த நகையின் மொத்த மதிப்பு சுமார் 8 கோடி ரூபாயாகும். தஸ்வாணி குடும்பத்தினரின் 22 ஆண்டுகால காத்திருப்பிற்கு இப்போது நீதிமன்றம் விடை கொடுத்திருப்பது அக்குடும்பத்தினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மற்ற செய்திகள்
