இவர் வந்துட்டாரா.. அப்போ இனி கவலை இல்ல.. கொரோனாவால் கேள்விக்குறியான தொடர்.. மாற்று வீரரை அறிவித்த பிசிசிஐ..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தொடர் நடைபெறுமா என்று ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் தொடர்
இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டி வரும் 6-ம் தேதி தொடங்குகிறது. இதற்காக இரு அணி வீரர்களும் பயோ பபுளில் உள்ளனர். இதனிடையே இந்திய அணி வீரர்கள் பயிற்சியை இன்று தொடங்க இருந்தனர். அதனால் வீரர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
வீரர்களுக்கு கொரோனா தொற்று
பரிசோதனை முடிவுகள் நேற்று வெளியானது. இதில் இந்திய அணியின் ஷிகர் தவான், ருத்துராஜ் கெய்க்வாட், ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் மாற்று வீரராக அறிவிக்கப்பட்ட நவதீப் சைனி ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை அடுத்து 4 பேரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
தொடர் நடைபெறுமா?
மேலும் இந்திய அணி பயிற்சியாளர் குழுவில் இடம்பெற்ற இருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தொடர் ஒத்திவைக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் மற்ற வீரர்கள் அனைவருக்கும் நெகட்டிவ் என்ற முடிவு வந்துள்ளது. 18 பேர் கொண்ட அணியில் 15 பேர் நல்ல உடல் தகுதியுடனே உள்ளனர்.
மாற்று வீரர் அறிவிப்பு
மேலும் தற்போது மாற்று வீரராக மயங்க் அகர்வால் அறிவிக்கப்பட்டுள்ளார். இதனால் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தொடர் திட்டமிட்ட படி நடைபெற உள்ளது. போட்டிகள் இந்தியாவில்தான் நடைபெறுவதால், மாற்று வீரர்களை தயார் செய்வதில் பிசிசிஐக்கு எவ்வித சிக்கலும் இருக்காது என சொல்லப்படுகிறது.

மற்ற செய்திகள்
