மொத்தம் 8 அடி நீளம்... எங்க 'ஒளிஞ்சிட்டு' இருக்குன்னு தெரியுதா?... வைரலாகும் புகைப்படம்!
முகப்பு > செய்திகள் > ஃபன் பேக்ட்ஸ்தொடர்ந்து விடுமுறையில் இருப்பதால் பொழுதை கழிக்க பல்வேறு வழிகளை இளைய தலைமுறையினர் தேடிக் கண்டுபிடிக்க ஆரம்பித்து இருக்கின்றனர். அந்த வகையில் மறைந்திருக்கும் விலங்குகள், பறவைகள் ஆகியவற்றை கண்டறிவது ஒரு நல்ல பொழுதுபோக்காக உள்ளது.
அந்த வகையில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த பாம்பு பிடிக்கும் குழு ஒன்று தங்களது பேஸ்புக் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து இதில் பாம்பு எங்கு மறைந்துள்ளது என தெரிகிறதா? என்று கேள்வி எழுப்பி இருந்தனர். விறகுகளுக்கு மத்தியில் ஒளிந்து கிடக்கும் அந்த 8 அடி நீளமுள்ள பாம்பு முதலில் நமது கண்களுக்கு தென்பட மறுத்தாலும் கடைசியில் அது இருப்பதை நம்மால் கண்டறிய இயலுகிறது.
நிறைய பேருக்கு பதில் தெரியவில்லை. எனினும் பேஸ்புக் பயனர் ஒருவர் பாம்பு இருக்கும் இடத்தை சுட்டிக்காட்டி மேலும் ஒரு புகைப்படத்தை பகிர்ந்து புதிரை விடுவித்து உள்ளனர். உங்களுக்கும் பதில் தெரியவில்லை எனில் கீழே உள்ள ட்வீட்டில் 2-வது படத்தை பாருங்கள். பாம்பு இருக்கும் இடம் சிவப்பு நிறத்தினால் வட்டமிடப்பட்டு இருக்கிறது.
There's A Huge Python Hiding In This Pic. Can You Find It?#snakes pic.twitter.com/dRkSRwv8Yx
— Manjari (@mazhil11) June 28, 2020