VIDEO: ‘புதுப்பேட்டை’ பட பாணியில் நடந்த ட்விஸ்ட்.. மாப்பிள்ளை யாருக்கு ‘தாலி’ கட்டியிருக்காரு பாருங்க.. ‘செம’ வைரல்..!
முகப்பு > செய்திகள் > ஃபன் பேக்ட்ஸ்புதுப்பேட்டை பட பாணியில் மணப்பெண்ணின் தோழிக்கு மாப்பிள்ளை தாலி கட்டிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘புதுப்பேட்டை’. இந்த படத்தில் நண்பனின் தங்கை திருமணத்திற்கு தனுஷ் சென்றிருப்பார். அப்போது தாலியை எடுத்துக் கொடுக்கும் போது திடீரென மணப்பெண்ணான சோனியா அகர்வாலுக்கு தனுஷ் தாலி கட்டி விடுவார். அதேபோல் தற்போது ஒரு சம்பவம் நடந்து இணையத்தில் வைரலாகி வருகிறது.
திருமணம் ஒன்றில் மணமகன் தாலி கட்ட செல்லும்போது, மணப்பெண்ணுக்கு பின்னால் நின்ற மணப்பெண்ணின் தோழிக்கு மாப்பிள்ளை திடீரென தாலி கட்டியுள்ளா. இதை பார்த்த உறவினர்கள் அதிர்ச்சி அடைந்து சத்தம் போட்டுள்ளனர்.
இந்த சம்பவம் எங்கு நடந்தது என்பது தெரியவில்லை. இந்த வீடியோவைப் பார்த்த பலரும் சீரியல் சூட்டிங் போன்று உள்ளது என்றும் சிலர் இந்த திருமணத்திற்கு சென்றதாகவும் கூறி வருகின்றனர். மணப்பெண்ணின் தோழிக்கு மணமகன் தாலி கட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
