திரைப்படங்களை மிஞ்சும் அரசு ஆவணப்படம் - திருநெல்வேலி பூர்வகுடிகளுக்காக தமிழக அரசின் சிறப்பு வெளியீடு
முகப்பு > செய்திகள் > தமிழகம்10 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ளது திராவிட முன்னேற்றக் கழகம். திமுக-வின் சார்பாக அதன் தலைவர் மு.க.ஸ்டாலின் முதல் முறையாக முதல்வராக பொறுப்பேற்று உள்ளார்.
சமீப காலமாக தமிழ் மற்றும் தமிழர் அடையாளங்களை மீட்டுருவாக்கம் செய்வதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் தனிக் கவனம் பெற்று வருகின்றன. கீழடி அகழ்வாராய்ச்சியை முடுக்கிவிட்டுள்ளது, அன்னைத் தமிழில் கோயில்களில் அரச்சனை அறிவிப்பு, பொது நிகழ்ச்சிகளில் தமிழ்த் தாய் வாழ்த்து கட்டாயம் என ஆணை பிறப்பித்தது என தமிழ் மொழி சார்ந்து தமிழ்நாடு அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் ஏராளம்.
இந்நிலையில், ‘காணி’ என்னும் மேற்குத் தொடர்ச்சி மலையின் பூர்வகுடி மக்களின் வாழ்வியலை ஆவணப்படுத்தும் நோக்கில் தமிழக அரசு புதிய முயற்சியை எடுத்துள்ளது. இது குறித்து ஆவணப்படத்தை தயாரித்துள்ள, திருநெல்வேலி மாவட்ட கலை மன்றம் கூறியுள்ளதாவது, ‘மேற்குத் தொடர்ச்சி மலையின் பூர்வகுடி மக்களான காணி பழங்குடியினர் குறித்த இந்த பிரத்யேக ஆவணப்படம், அவர்களின் வழிபாட்டு முறைகள், திருவிழாக்கள், கலாசார நடைமுறைகள், மரபுகள் மற்றும் தொழில் முறைகள் ஆகியவை குறித்தும், அவர்களின் வாழ்விடம் மற்றும் அதைச் சுற்றியுள்ள வன உயிரினங்களை பற்றியும் ஆராய்கிறது.
இந்த ஆவணப்படமானது 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிடப்பட உள்ளது. இந்தப் படத்தில் காட்டப்பட்டுள்ள அனைத்து நிகழ்வுகளும் காணி இனத்தவரால் அன்றாட வாழ்வில் பழமை மாறாமல் இன்றளவும் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது’ என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பிரம்மாண்ட திரைப்படங்களை மிஞ்சும் வகையில் ‘காணி’ ஆவணப் படத்தின் முன்னோட்டம் உள்ளது. அது குறித்தான வீடியோ தற்போது வைரலாகி பல தரப்பினரின் பாராட்டுகளையும் பெற்று வருகின்றது.
“ காணி நிலம் வேண்டும் பராசக்தி!”
The lives of KAANI tribes in the cradle of mighty hills of Tirunelveli district where River Tamirabarani originates❤️
First ever documented.
Kudos and thanks to@Collectortnv @Vish_speaks pic.twitter.com/2kWMg3Qexf
— Thangam Thenarasu (@TThenarasu) December 29, 2021