'ஊஞ்சல்' ஆடுனதுக்கு 'இவ்ளோ' அக்கப்போரா?... வைரல் வீடியோவால்... 'திணறும்' நெட்டிசன்கள்!

முகப்பு > செய்திகள் > ஃபன் பேக்ட்ஸ்

By Manjula | Dec 28, 2019 09:54 PM

அவ்வப்போது சமூக வலைதளங்களில் ஏதாவது ஒரு விஷயம் செம வைரலாகும். நெட்டிசன்களும் அதுகுறித்து விவாதித்து சமூக வலைதளங்களை தெறிக்க விடுவார்கள். அப்படி ஒரு சம்பவம் தான் தற்போது நடந்துள்ளது. சில நாட்களுக்கு முன் ட்விட்டரில் ஒரு வீடியோ வெளியானது.

Millions of people confused by a Viral Video, Watch Here

ஊஞ்சல் ஆடும் நபர் ஒருவரின் வீடியோ அது. அவர் என்னவோ சாதாரணமாக தான் ஊஞ்சல் ஆடியிருக்கிறார். ஆனால் அவர் எந்தப்பக்கம் பார்த்து ஊஞ்சல் ஆடினார்? என்ற கேள்விதான் தற்போது சமூக வலைதளங்களை திணறடித்து கொண்டிருக்கிறது.  இதுவரை 18 லட்சம் பேர் இந்த வீடியோவை பார்த்துள்ளனர்.

அதில் முக்கால்வாசி பேர் அவர் எந்தப்பக்கம் பார்த்து ஊஞ்சல் ஆடினார் என்று தங்களது மொத்த அறிவையும் பயன்படுத்தி விடையளித்து வருகின்றனர். ஆனாலும் இந்த குழப்பம் தீரவில்லை. என் வாழ்நாளில் இவ்வளவு பெரிய குழப்பத்திற்கு தான் ஆளானதில்லை என்றும் இதுகுறித்து சிலர் கருத்து தெரிவித்து உள்ளனர். இஞ்ச் பை இஞ்சாக வீடியோவை பார்த்தும் மனிதர் எந்தப்பக்கம் முகத்தை வைத்திருந்தார் என்பதை கண்டுபிடிக்க முடியவில்லையாம்.

நீங்களும் இந்த வீடியோ பார்த்து அவர் எந்தப்பக்கம் முகத்தை வச்சு ஊஞ்சல் ஆடுனாருன்னு, கண்டுபிடிச்சு சொல்லுங்க!

Tags : #TWITTER