'அடங்கப்பா'.. 'இது ஒலக நடிப்புடா சாமி!'.. உரிமையாளருக்கு டிமிக்கி கொடுக்க, ஆஸ்கர் வின்னிங் 'பெர்ஃபார்மன்ஸ்' செய்த நாய்!
முகப்பு > செய்திகள் > ஃபன் பேக்ட்ஸ்By Siva Sankar | Sep 09, 2019 10:45 AM
வீட்டில் வளர்ப்புப் பிராணிகளாக இருக்கும் செல்ல நாய்கள் செய்யும் சேட்டைகள் சில நேரங்களில் மிகவும் விசித்திரமானவையாக இருக்கும்.

இதையெல்லாம் இதுங்க எங்க போய் யாருகிட்ட இருந்து கத்துக்கிதுங்க? என்று தோன்றும் அளவுக்கு விசேஷமான பல நடவடிக்கைகள் அவற்றிடம் தென்படும். உண்மையைச் சொல்லப் போனால் மனிதர்களை விடவும் சில தந்திரமான உத்திகளை அவை கையாளுகின்றன.
அப்படித்தான் ரெடிட் இணையத்தில், நாய் ஒன்று செய்த ஆஸ்கர் வின்னிங் குறும்பு நடிப்பு வீடியோ வெளியிடப்பட்டதை அடுத்து, அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், நாயின் வளர்ப்பாளரான பெண் ஒருவர், அதற்கு நகங்களை வெட்டிவிடுவதற்காக முயல்கிறார்.
அந்த நாய் அப்படியே மயக்கம் போட்டு மல்லாக்க விழுந்தாற்போல் விழுந்துவிடுகிறது. உடனே உரிமையாளர் பயந்துவிடுகிறார். தனது நாயை தட்டுவிட்டு எழுப்பப் பார்க்கிறார். ஆனாலும் அது நடிப்பில் ஆஸ்கர் வாங்கியே தீருவேன் என்பது போல அப்படியே படுத்திருக்கிறது.
கடைசியில் நாயின் குறும்புத்தனத்தை கண்டுபிடித்தன் உரிமையாளர் அதன் நகங்களை வெட்டக் கூடாது என்பதற்காக நாய் அவ்வாறு செய்ததைப் பார்த்து ஆச்சரியத்தில் உறைந்ததோடு, இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவேற்றியுள்ளார்.
