'புதிய இணைப்பிற்கு உயரும் கட்டணம்'...'லைன்மேன் வந்தா அதுக்கும் கட்டணம்'...வரப்போகும் அதிரடி!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Sep 09, 2019 10:24 AM

தமிழகத்தில் புதிதாக மின் இணைப்பு பெறுவதற்கான கட்டணம் உயரப்போவதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

Deposit for New power connection charges may hike in Tamilnadu

சென்னையில் கடந்த வாரம் நடைபெற்ற மின்சார ஒழுங்குமுறை ஆணைய மாநில ஆலோசனைக் கூட்டத்தில், கட்டண உயர்வு குறித்த முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது குறித்து மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அளித்துள்ள தகவலில், பொதுமக்களிடம் கருத்து கேட்டபிறகு கட்டண உயர்வு இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புதிய கட்டண முறையின் படி, புதிய மின் இணைப்பு பெறுவதற்கான விண்ணப்பக் கட்டணம் 50 ரூபாயிலிருந்து 400 ரூபாயாக உயரும்.

அதே போன்று வீட்டு உபயோக சிங்கிள் பேஸ் ஒரு கிலோவாட் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு ரூபாய் 200 முதல் 1000 வரை பாதுகாப்பு கட்டணம் உயர வாய்ப்பு உள்ளது. மேலும் மூன்று பேஸ் இணைப்பு பெறுவோருக்கு கட்டண உயர்வு என்பது, ஒரு கிலோவாட்க்கு  600 முதல் 1800 வரை உயர வாய்ப்பு உள்ளதாக அந்த கமிட்டி பரிந்துரைத்துள்ளது. வணிகரீதியான பயன்பாட்டை பொறுத்தவரை, ஒரு கிலோவாட் புதிய  மின் இணைப்பிற்கு 500 ரூபாய் இருக்கும் கட்டணம் 2000 ரூபாயாக உயர வாய்ப்பு இருக்கிறது.

இதில் உயர்ந்த மின் இணைப்பு கேட்டு விண்ணப்பிக்கும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு கிலோவாட் 3100  ரூபாயாக உயரும். இது தற்போது 800 ரூபாய் என்று இருக்கிறது. இதனிடையே மின்சார பிரச்சனை தொடர்பாக வந்து ஆய்வு செய்யும் மின்சார ஊழியர்களுக்கு தற்போது கட்டணம் எதுவும் வழங்கப்படுவதில்லை. ஆனால் மின்சார ஒழுங்குமுறை ஆணைய பரிந்துரையில், மின்சார ஊழியர்கள் வந்து ஆய்வு செய்வதற்கு, வீட்டு உபயோக இணைப்புக்கு 580 முதல் 1920 வரை கட்டணம் வசூலிக்கலாம் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அதே போன்று  3 பேஸ் இணைப்பு வைத்திருப்பவர்களுக்கு 3,810 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கலாம் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே கடந்த 2004ஆம் ஆண்டு தான் கட்டண உயர்வு இருந்ததாகவும், அதற்கு பிறகு கட்டண உயர்வு இல்லை எனவும் மின்சார ஒழுங்கு முறை ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் 2018 -19 ஆண்டில் 29 லட்சம் புதிய மின் இணைப்புகள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags : #TNEB #TANGEDCO #POWER CONNECTION #TAMIL NADU ELECTRICITY SUPPLY