ஐடி இண்டஸ்ட்ரில '30 லட்சம்' பேர 'வேலைய' விட்டு தூக்க போறாங்களா...? 'வெளியான பரபரப்பு தகவல்...' - விளக்கம் அளித்த நாஸ்காம்...!
முகப்பு > செய்திகள் > வணிகம்இந்திய ஐ.டி.துறையில் அடுத்த ஆண்டுக்குள் 30 லட்சம் பேர் வேலையை இழப்பார்கள் என்று தகவல் வெளியான நிலையில், இதனை தேசிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் கூட்டமைப்பான நாஸ்காம் விளக்கம் அளித்துள்ளது.

இந்தியத் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் 2022-ஆம் ஆண்டுக்குள் ஆர்.பி.ஏ எனப்படும் ரோபோ செயல்முறை ஆட்டோமேசன் காரணமாக 30 லட்சம் பணியாளர்களை பணியில் இருந்து விடுவிக்கப்படும் என்றும் இதன் மூலம் ஆண்டுதோறும் 100 பில்லியன் டாலர் பணத்தை நிறுவனங்கள் மிச்சப்படுத்த திட்டமிட்டுள்ளதாக பாங்க் ஆப் அமெரிக்கா அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக செய்தி வெளியானது.
இந்த தகவல் ஐ.டி. துறையில் பணியாற்றுவோர் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், இந்த தகவல் முற்றிலும் தவறானது என்று தேசிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் கூட்டமைப்பான நாஸ்காம் தெரிவித்துள்ளது.
அதாவது, ஆர்.பி.ஏ. காரணமாக 2022-ஆம் ஆண்டுக்குள் ஐ.டி. நிறுவனங்களில் 30 சதவீத பணிவாய்ப்புக் குறையும் என ஆய்வில் கூறப்பட்டிருந்தது.
இது பற்றி விளக்கமளித்துள்ள நாஸ்காம், “தொழில்நுட்பத்தின் பரிணாமம் மற்றும் அதிகரிக்கும் ஆட்டோமேஷன் மூலம், தகவல் தொழில்நுட்ப வேலைகளின் தன்மை ஒட்டுமொத்தமாக புதிய வேலைகளை உருவாக்க வழிவகுக்கும். திறமையானவர்களுக்கு ஐ.டி. துறை தொடர்ந்து வேலை வழங்கி வருவதாகவும் இந்த நிதியாண்டில் 1,38,000 பேர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர் என்றும் நாஸ்காம் தெரிவித்துள்ளது.
டிஜிட்டல் திறனின் 2 லட்சத்து 50 ஆயிரம் ஊழியர்களின் திறமையை ஐ.டி. துறை மேம்படுத்துள்ளது என்றும் புதிதாக நாற்பதாயிரம் பேரை வேலைக்கு எடுத்துள்ளதாகவும் நாஸ்காம் கூறியுள்ளது.
தற்போது ஐடி மற்றும் பிபிஎம் துறையின் வருவாய் 194 பில்லியன் டாலர்களாக உள்ள நிலையில், 2025ஆம் ஆண்டில் இது 300-350 பில்லியன் டாலராக உயரும் என்றும் நாஸ்காம் தெரிவித்துள்ளது. .

மற்ற செய்திகள்
