'விமான பணிப்பெண்ணுக்கு நடந்தது என்ன'?... 'வாயிலும், வயிற்றிலும் அடித்துக் கொண்டு கதறிய தாய்'... உண்மையை சொன்னதுக்கு பறிபோன வேலை?
முகப்பு > செய்திகள் > உலகம்ஏர் ஹோஸ்டஸாக பணியாற்றி வந்த இளம் பெண்ணின் மரண வழக்கை விசாரித்த தலைமை காவல் அதிகாரி அதிரடியாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். வழக்கை விசாரித்ததற்காக வேலை பறிபோனது எப்படி?.. விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.

கிரிஸ்டின் டகேரா என்ற ஏர் ஹோஸ்டஸ், சில தினங்களுக்கு முன்பு, பிலிப்பைன்ஸ் நாட்டின் கார்டன் சிட்டி கிரேண்ட் ஹோட்டலில் உள்ள குளியலறையில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார்.
பின்னர், காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.
கிரிஸ்டின் டகேராவின் கை மற்றும் கால்களில் காயங்கள் இருந்தன. அதுமட்டுமின்றி, அவரது உடலில் விந்து படிமங்களும் கண்டறியப்பட்டதாக தலைமை காவல் அதிகாரி குறிப்பிட்டார்.
அதைத் தொடர்ந்து, கிரிஸ்டின் மரணம் தொடர்பாக 11 ஆண்கள் மீது பாலியல் வன்புணர்வு மற்றும் கொலை ஆகிய குற்றங்களின் அடிப்படையில், அந்த காவல்துறை அதிகாரி வழக்கு பதிவு செய்தார்.
இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணக்கு வந்த போது, கிரிஸ்டின் டகேராவின் மரணத்திற்கு காரணம் மூளை அனீரிஸம் (brain aneurysm) தானே தவிர, அவர் வன்புணர்வு செய்யப்படவில்லை என அரசு தரப்பு வக்கீல் வாதாடினார். அதற்கு ஆதாரமாக பிரேத பரிசோதனை அறிக்கையையும் சமர்பித்தார்.
ஆனால், மரணமடைந்த பெண்ணின் தாயார், இதனை ஏற்க மறுத்து, தன்னுடைய மகள் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டுள்ளார் எனவும், அதற்கான தக்க தண்டனையை குற்றவாளிகளுக்கு அளிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதற்கிடையே, இந்த வழக்கை தலை கீழாக புரட்டிப்போடும் படியான மேலும் ஒரு அதிர்ச்சி தகவல் வெளியானது.
டகேராவை வன்புணர்வு செய்து கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட 11 ஆண்களும் ஓரினச்சேர்க்கையாளர்கள் என தெரியவந்துள்ளது.
ஏர் ஹோஸ்டஸ் ஒருவர் வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்டுள்ளார் என்று இந்த செய்தி முதலில் வெளியானதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்நிலையில், குற்றசாட்டப்பட்ட அனைத்து ஆண்களும் ஓரினச்சேர்க்கையாளர்கள் என்பதாலும், பிரேத பரிசோதனை அறிக்கையில் மூளை அனீரிஸம் தான் அவரின் மரணத்திற்கு காரணம் என்று குறிப்பிடப்பட்டுள்ளதாலும், வழக்கின் போக்கு முற்றிலுமாக மாறியுள்ளது.
எனவே, ஒரு high profile வழக்கை தவறாக வழிநடத்திய குற்றத்திற்காக, இந்த வழக்கை விசாரித்த தலைமை காவல் அதிகாரியை பணி நீக்கம் செய்ய அதிரடியாக உத்தரவிடப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்
