கோரத் தாண்டவமாடும் கொரோனா!... 'நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்!?

முகப்பு > செய்திகள் > லைப்ஸ்டைல்

By Manishankar | Mar 23, 2020 01:23 PM

நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள், கொரோனா தொற்றால் பாதிப்படைவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகமாக இருப்பதால், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவு வகைகளைப் பற்றி விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு.

healthy foods to boost immunity amid coronavirus outbreak

பழ வகைகளில் ஆரஞ்சு, சாத்துக்குடி, அன்னாசிப்பழம், பப்பாளி, கிவி, கொய்யாப்பழம், தக்காளி ஆகியவற்றை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மை கொண்டவையாக மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது.

காய்கறிகளை பொறுத்தமட்டில் காரட், பீட்ரூட், கீற வகைகள், முட்டைக்கோஸ், காலிஃபளவர், கத்திரிக்காய், ப்ரோக்கோலி மற்றும் குடமிளகாய் முதலியவற்றை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் என கூறப்பட்டுள்ளது.

மேலும், இஞ்சி, மஞ்சள், பூண்டு, பாதாம், எலுமிச்சை, க்ரீன் டீ, வாதுமைக் கொட்டை (வால்நட்ஸ்) போன்றவையும் உட்கொள்ளலாம்.

நீர் ஆகாரங்களைப் பொறுத்தவரை சுகாதாரமான குடிநீர், இளநீர், க்ரீன் டீ, வைட்டமின் சி அடங்கிய பழச்சாறுகள், பால் மற்றும் மோர், தினமும் 2.5 லி முதல் 3 லிட்டர் வரை அருந்துவது நல்லது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பு: இவை அனைத்தும் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும் உணவு வகைகளே அன்றி, கொரோனா வைரஸை தடுக்கும் உணவு வகைகள் அல்ல.

 

Tags : #IMMUNITY #HEALTHY #FOODS #CORONAVIRUS