கூகுள் நிறுவனத்தில் 9 ரவுண்டு நடந்த இன்டர்வியூ.. வேலை கிடைக்குமா? இறுதியில் காத்திருந்த இன்ப அதிர்ச்சி
முகப்பு > செய்திகள் > வணிகம்புதுடில்லி: இந்தியாவைச் சேர்ந்த பெண் பொறியாளர் சம்ப்ரீத்தி யாதவ்-க்கு ஆண்டுக்கு 1.10 கோடி ரூபாய் ஊதியம் வழங்குவதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.

பீகார் மாநிலம் பாட்னாவைச் சேர்ந்த வங்கி அதிகாரியாக பணிபுரிபவர் ராமசங்கர் யாதவ். இவரது மனைவி ஷிஷி பிரபா திட்டமிடல் மற்றும் மேம்பாட்டுத் துறையின் உதவி இயக்குனராக உள்ளார். இந்த தம்பதியின் மகளான சம்ப்ரீத்தி யாதவ் கடந்த 2014-ஆம் ஆண்டு புகழ்பெற்ற நோட்ரே டேம் அகாடமி பள்ளியில் 10 CGPA மதிப்பெண்களுடன் பள்ளிக் கல்வியை முடித்துள்ளார்.
பொறியியல் படிப்பு:
இந்த நிலையில், டெல்லி இன்டர்நெஷனல் பள்ளியில் 12-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்று பின்னர் 2016-ஆம் ஆண்டு JEE முதன்மை தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். அதுமட்டுமல்லாமல், டெல்லி டெக்னாலஜி பல்கலைக்கழகத்தில் கம்ப்யூட்டர் சைன்ஸ் பிரிவில் பி-டெக் படிப்பை 2021 மே மாதம் சம்ப்ரீத்தி முடித்துள்ளார்.
வேலை வழங்க தயாராக இருக்கிறோம்:
பி-டெக் படிப்பை முடித்த நிலையில், ஃப்ளிப்கார்ட் ஆகிய முன்னணி நிறுவனங்கள் இவருக்கு வேலை வழங்கத் தயாராக இருப்பதாக தெரிவித்தன. அதற்கு பிறகு, மைக்ரோசாஃப்ட் நிறுவனம் நடத்திய நேர்காணலில் தேர்ச்சி அடைந்து அந்த நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்த சம்ப்ரீத்தி தற்போது வருடத்திற்கு 44 லட்சம் ரூபாய் ஊதியம் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
9 சுற்று நடந்த நேர்காணல்:
இந்த நிலையில் கூகுள் நிறுவனத்தில் வேலைக்காக சம்ப்ரீத்தி விண்ணப்பிக்க, உடனடியாக ஆன்லைன் மூலமாக நேர்காணலுக்கு அழைத்திருக்கிறது கூகுள். மொத்தம் 9 சுற்றுகளாக நடைபெற்ற இந்த நேர்காணல் அனைத்திலும் அவர் தேர்ச்சி பெறவே, ஆண்டுக்கு 1.10 கோடி ரூபாய் ஊதியம் வழங்குவதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.
தனது சொந்த முயற்சியின் காரணமாக, கூகுள் நிறுவனத்தில் விண்ணப்பித்து வேலை பெற்ற சம்ப்ரீத்தி சீக்கிரத்தில் லண்டனில் உள்ள கூகுள் நிறுவனத்தில் தனது பணியைத் தொடங்க உள்ளார்.
கடந்த சில வருடங்களாக இந்தியாவில் உள்ள ஐஐடி-களில் வளாக நேர்காணல்கள் நடைபெறுவது வெகுவாக குறைந்து காணப்பட்டது. ஆனால், இந்த வருடம் உலகின் பல முன்னணி நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு ஆட்களைத் தேர்வு செய்து வருகின்றனர். பல கோடிகளில் சம்பளம் தருவதற்கும் தயாராக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
