'பிரபல' ஐடி நிறுவனங்கள் வெளியிட்ட 'வேற லெவல்' அறிவிப்பு...! மனசே குளிர்ந்து போச்சு...! - உற்சாகத்தில் ஐடி ஊழியர்கள்...!
முகப்பு > செய்திகள் > வணிகம்இன்ஃபோசிஸ், விப்ரோ போன்ற ஐ.டி. நிறுவனங்கள் அறிவித்திருந்த சம்பள உயர்வு குறித்தான அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது.

கொரோனா காலகட்டத்தில் பல நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை பணியில் இருந்து எடுத்து வந்தாலும், ஒரு சில நிறுவனங்கள் ஊழியர்களின் மனம் குளிரும் சில அறிவிப்புகளை வெளியிட்டிருந்தது.
அந்த வகையில் இன்ஃபோசிஸ், விப்ரோ உள்ளிட்ட தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் சம்பள உயர்வை சில நாட்களுக்கு முன்பு அறிவித்திருக்கின்றன.
சந்தையில் தேவை அதிகரித்திருக்கிற நிலையில், ஒவ்வொரு நிறுவனங்களும் கூடுதல் பணியாளர்களை தேர்ந்தெடுத்து வருகின்றன. இருந்தாலும் முந்தைய வருடங்களை காட்டிலும் கொரோனா ஊரடங்கில் நிறுவனங்களில் இருந்து வெளியேறுவோர் விகிதம் அதிகரித்திருக்கிறது.
அதோடு இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் தலைமைச் செயல்பாட்டு அதிகாரி பிரவீண் ராவ், தங்களிடம் பணிபுரியும் திறமையான பணியாளர்களை ஊக்குவிப்பதற்காக சம்பள உயர்வு அறிவிக்கப்பட்டிருக்கிறது என தெரிவித்தார்.
இன்ஃபோசிஸ் நிறுவனம் இந்தியாவில் 19,230 பணியாளர்களையும் வெளிநாட்டு பிரிவுகளில் 1,941 பணியாளர்களையும் புதிதாக நியமனம் செய்திருக்கிறது.
இதற்கு முன்பே கடந்த ஜனவரி 1-ம் தேதி முதல் ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இரண்டாம் கட்ட ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டிருக்கிறது
அதோடு விப்ரோ நிறுவனமும் சம்பள உயர்வை அறிவித்திருந்த நிலையில், இந்த சம்பள உயர்வு வரும் செப்டம்பர் முதல் இந்த ஊதிய உயர்வு அமலுக்கு வரும் என்றும் 80 சதவீத பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு இருக்கும் என்றும் விப்ரோ தெரிவித்திருக்கிறது. இந்த ஆண்டில் மேலும் 18,000 நபர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்க திட்டமிட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் முக்கிய நிறுவனமான டிசிஎஸ் கடந்த ஏப்ரல் முதலே சம்பள உயர்வை அறிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
