வயாகரா கொடுத்த வாழ்க்கை..! கோமாவிற்கு சென்று உயிர்பிழைத்த அதிசயம்.. திகைத்து போன மருத்துவர்கள்

முகப்பு > செய்திகள் > உலகம்

By Issac | Jan 06, 2022 06:31 PM

பிரிட்டன்: பிரிட்டனில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டு 28 நாட்களாக கோமாவில் இருந்த செவிலியரை மருத்துவர்கள் வயாகரா மருந்து கொடுத்து காப்பாற்றிய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

uk nurse in coma due to corona given Viagra and saved

மருத்துவ என்பது மிகவும் விஞ்ஞானம் கவர்ச்சிகரமானது, அது சில சமயங்களில் பல ஆச்சரியங்களை நிகழ்த்தக் கூடியது. அந்த வகையில் பிரிட்டனில் நடந்த ஆச்சரியமான சம்பவத்தில் ஒரு உயிரை காப்பாற்றியுள்ளனர்.

uk nurse in coma due to corona given Viagra and saved

கோவிட்-19 கோமாவில் 28 நாட்கள் கழித்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த ஒரு செவிலியருக்கு, பரிசோதனை சிகிச்சையின் ஒரு பகுதியாக மருத்துவர்கள் வயாகராவை கொடுத்த நிலையில், அவர் அதிசயமான முறையில் குணமடைந்து உள்ளார். இதனைக் கண்ட அவரது உறவினர்கள் ஆச்சரியமடைந்தனர்.

uk nurse in coma due to corona given Viagra and saved

ருசி மற்றும் வாசனை இழப்பு:

இங்கிலாந்தில் உள்ள லிங்கன்ஷையரைச் சேர்ந்த 37 வயதான மோனிகா அல்மெய்டா, நவம்பர் 9-ஆம் தேதி அன்று மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டபோது, ​​கொரோனா பரிசோதனையில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர் இரண்டு டோஸ் தடுப்பூசி போடப்பட்டிருந்த நிலையிலும், அவர் ருசி மற்றும் வாசனையை இழந்து, கடுமையான இருமல் இருந்த போதிலும் ரத்தம் வந்துள்ளது.

uk nurse in coma due to corona given Viagra and saved

சுயநினைவு இன்றி கோமா:

அதன்பிறகு, அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அவரது உடல்நிலை தீவிரமாக மோசமடைந்ததது. ஒரு வாரம் கழித்து, அவர் தீவிர சிகிச்சைக்கு மாற்றப்பட்ட நிலையில், நவம்பர்-16 அன்று சுயநினைவு இன்றி கோமா ஆனார். அதன்பிறகு, அவர் கோமாவில் இருந்து கண்விழித்தபோது, ​​அவர் ஒப்புக்கொண்ட பரிசோதனைச் சிகிச்சைத் திட்டத்தின் ஒரு பகுதியாக, அவருக்கு அதிக அளவு வயாகரா கொடுக்கப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

வயாகரா:

ரத்த தமனிகளின் சுவர்களைத் தளர்த்துவதன் மூலமாக, விறைப்புச் செயலிழப்புக்கான மருந்தான வயாகரா உடலின் அனைத்துப் பகுதிகளுக்கும் அதிக இரத்தத்தைச் சுற்ற அனுமதிக்கிறது. அவர் டிசம்பர்-14 அன்று கோமாவில் இருந்து திடீரென எழுந்தார், மேலும் வீட்டிற்குத் செல்ல அனுமதிக்கப்பட்டார். மோனிகா அல்மெய்டா ஒரு புதிய மருத்துவ சோதனை முயற்சியின் பலனாக உயிர்பிழைத்தார். இந்த சம்பவம் அனைவரிடையும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #UK #NURSE #COMA #CORONA #VIAGRA #கொரோனா #கோமா #வயாகரா #நர்ஸ்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Uk nurse in coma due to corona given Viagra and saved | World News.