VIDEO: ஐயோ, 'அத' பண்ணனும்னு சுத்தமா நியாபகம் இல்ல...! 'வீடியோ கால்'ல பேசுறப்போ 'சுந்தர் பிச்சை' செய்த தவறு...! - வைரலாகும் வீடியோ...!
முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்வீடியோ கால் செய்யும் போது கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை செய்த தவறை சுட்டிக்காட்டி ட்வீட் ஒன்றை அவரே பகிர்ந்துள்ளார்.

கடந்த வருடம் கொரோனா வைரஸ் ஆரம்பித்தது தொடங்கி நண்பர்கள், குடும்பம், அலுவலக உரையாடல்கள், கலை இலக்கிய கூட்டங்கள் என அனைத்திற்கும் வீடியோ கால் தான் ஒரே தீர்வாக மாறி போனது. வீடியோ கால் சேவைக்கான தேவை அதிகரித்ததை தொடர்ந்து ஜூம் மீட், மைக்ரோசாப்ட் டீம்ஸ், கூகுள் மீட் மற்றும் பல்வேறு வீடியோ கால் செயலிகள் அசுர வேகம் அடைந்தது.
வீடியோ காலிங் சேவைகளை அதிகம் சார்ந்து இருக்கும் சூழலில் பலர் இவற்றில் உள்ள தொழில்நுட்ப சிக்கல்களில் அவ்வப்போது மாட்டிக்கொள்வதும் அடிக்கடி நடக்கிறது. இதுபோன்ற ஒரு சிக்கலில் கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சையும் மாட்டியுள்ளார்.
சமீபத்தில் கெர்மிட் தி பிராக் உடன் நடைபெற்ற நேர்காணலின் போது சுந்தர் பிச்சை பேசுகையில் அன்மியூட் செய்ய மறந்துவிட்டார். பின் அதை கவனித்த சுந்தர் பிச்சை சிரித்துவிட்டு நேர்காணலை தொடர்ந்தார். இந்த சம்பவத்தை தனது ட்விட்டரில் சுந்தர் பிச்சை பகிர்ந்துள்ளார். மேலும், அனைவரிடமும் அன்மியூட் செய்ய மறக்காதீர்கள் எனவும் அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.
Always remember to unmute...thanks @KermitTheFrog for joining us on @YouTube #DearEarth and chatting about some of our shared interests:) 🌎🏏🦗 https://t.co/RCIUnPcltK pic.twitter.com/cEd6BjkA6H
— Sundar Pichai (@sundarpichai) October 27, 2021

மற்ற செய்திகள்
