பெரிய பெரிய 'ஐடி கம்பெனி'ல கூட இவ்ளோ 'சம்பளம்' தரமாட்டாங்க...! ஆனுவல் 'டேக் ஹோம்' எவ்ளோ வரும்னு தெரிஞ்சா உடனே 'டிக்கெட்' போட்ருவீங்க...! - அப்படி என்ன வேலை அது...?
முகப்பு > செய்திகள் > வணிகம்பிரிட்டனை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் காய்கறி பறிக்கும் பணிக்கு அறிவித்துள்ள வருட ஊதியம் அனைவரையும் வாய் பிளக்க வைத்துள்ளது.

ஐரோப்பா நாட்டின் வடமேற்கில் அமைந்துள்ள ஒரு பிரம்மண்டாமான தீவு தான் யுனைடெட் கிங்டம் ஆஃப் கிரேட் பிரிட்டன். இங்கு விளையும் புத்தம்புதிய ஃபிரெஷ்ஷான காய்கறிகளும், பழங்களும் தான் பெரிய பெரிய சூப்பர் மார்கெட்களுக்கு விற்கப்படுகிறது.
இங்கு தொழில் வர்த்தகத்தினை நடத்தி வரும் டி.எச் க்ளெமென்ட்ஸ் மற்றும் சன் லிமிடெட் (TH Clements and Son Ltd) என்ற நிறுவனம் காய்கறி பறிக்கும் பணியில் ஈடுபட நினைப்போருக்கு மிக அதிக ஊதியத்தில் அற்புதமான வேலை வாய்ப்பை வெளியிட்டுள்ளது.
அந்த வேலைவாய்ப்பு அறிக்கையில், 'கோவிட் -19 தொற்று மற்றும் பிரெக்சிட் பிரச்சனை காரணமாக எங்கள் நிறுவனத்தில் கடும் ஊழியர் பற்றாக்குறை ஏற்பட்டது.
இங்கு ஏற்பட்டுள்ள நிலைமை மிகவும் கடினமாக இருப்பதால் வேலை வாய்ப்பு தேடுபவர்களுக்கு உற்சாகம் அளிக்கும் விதமாக பல அறிவிப்புகளை வெளியிட்டுள்ளோம்.
தங்களிடம் காய்கறிகள் மற்றும் பழங்களை அறுவடை செய்யும் பணிக்கு சேரும் ஊழியர்களுக்கு ஆண்டுக்கு சுமார் £62,000 (62,000 பவுண்ட்ஸ்) சம்பளம் வழங்கப்படும்' என அறிவித்துள்ளது.
இந்த ஊதியம் இந்திய மதிப்பில் தோராயமாக ரூ.63 லட்சம் வரை வரும். மேலும் 2 தனித்தனி விளம்பரங்களில் வருடம் முழுவதும் வயலில் உள்ள முட்டைக்கோஸ் மற்றும் ப்ரோக்கோலிகளை பறிக்கும் வேலை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, காய்கறிகளை பறிக்கும் வேலைகளில் ஈடுபடுவோருக்கு 1 மணி நேரத்திற்கு 30 பவுண்ட்ஸ் (ரூ.3000) வீதம் நாளொன்றுக்கு 240 பவுண்ட்ஸ் (ரூ.24,000) ஊதியமும் என ஆண்டுக்கு 62,400 பவுண்ட்ஸ் (தோராயமாக ரூ.62,71,526) ஊதியமும் வழங்கப்படும் என்று அந்நிறுவனத்தின் விளம்பரத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

மற்ற செய்திகள்
