கூகுள் 'எங்கள' நசுக்க பாக்குறாங்க...! அவங்க பண்றது கொஞ்சம் கூட நல்லா இல்ல...' - இதுக்கு ஒரு முடிவு கட்டியாகணும்...' - 'விஸ்வரூபம்' எடுக்கும் விவகாரம்...!
முகப்பு > செய்திகள் > வணிகம்டிஜிட்டல் தளத்தில் ஆதிக்கம் செலுத்தி, ஆரோக்கியமான போட்டி சந்தையை சட்டவிரோதமாக நசுக்க நினைப்பதாக கூகுள் மீது 36 அமெரிக்க மாகாணங்கள் வழக்கு தொடுத்துள்ளன.

நாளுக்கு நாள் அசுரத் தனமாக வளர்ந்து வரும் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப உலகமே டிஜிட்டல் மயத்திற்கு மாறி வருகிறது. இன்றைய டிஜிட்டல் உலகில் அனைத்துமே தங்கள் செல்போனில் கிடைக்கும் விதமான ஆப்கள் புதிது புதிதாக உருவாக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு உருவாக்கப்படும் ஆப்களை, கூகுள் ப்ளே ஸ்டோர் மூலம் அதை உருவாக்கியவர்கள் விற்பனை செய்வார்கள். இந்த ஆப்களை ஆண்ட்ராயிட் உபயோகிக்கும் மக்கள் டவுன்லோட் செய்து தங்கள் செல்போனில் இன்ஸ்டால் செய்ய கட்டணம் செலுத்த வேண்டும். அப்படியாக நடக்கும் ஒவ்வொரு பரிவத்தனைகளுக்கு இடைத்தரகராக செயல்பட்டு 30% கமிஷனாக கூகுள் நிறுவனம் வசூலித்து வருகிறது.
இது சந்தையில் வசூலிக்கப்படுவதை பல மடங்கு அதிகம் ஆகும். கூகுள் நிறுவனம் போட்டி சந்தைக்கு இடம் கொடுப்பதில்லை என கூறப்படுகிறது. போட்டி நிறுவனங்கள் செயல்பட கூகுள் நிறுவனம் இடையூறு செய்வதால் சந்தை மதிப்பு கணிசமான குறைக்கிறது. மேலும் புதிய முயற்சிகளும் இதனால் கைவிடப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதுநாள் வரையிலும், இன்டர்நெட்டை கையில் வைத்திருந்த கூகுள் நிறுவனம், தற்போது டிஜிட்டலிலும் ஆதிக்கம் செலுத்துகிறது. இதனால், ஆண்ட்ராய்டு சாதன பயனாளர்கள் வலுவான போட்டியை இழந்து விட்டனர். இதுதொடர்பாக, ஏற்கனவே கூகுள் மீது அமெரிக்காவில் கண்டனங்கள் எழுப்பப்பட்டது..
இந்த பிரச்சனை அடைந்ததால், இந்த தொழில் ஆதிக்கத்தை தடுப்பதற்காக புதிய சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த சட்டத்தை மீறி தற்போது கூகுள் நிறுவனம் செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. எனவே, கூகுளின் சட்ட விரோத ஆதிக்கத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்காகவும், லட்சக்கணக்கான நுகர்வோர் மற்றும் வணிக உரிமையாளர்களை பாதுகாக்கவும் 36 அமெரிக்க மாகாண அரசுகளும், வாஷிங்டன் சார்பிலும் நியூயார்க் அட்டர்னி ஜெனரல் ஜேம்ஸ் மற்றும் உட்டா, வட கரோலினா மற்றும் டென்னசி ஆகியவற்றின் அட்டர்னி ஜெனரல் ஆகியோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து உள்ளனர். இது, இணைய, டிஜிட்டல் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மற்ற செய்திகள்
