வைகுண்டத்திற்கு வழி கேட்ட ஓபிஎஸ் – “எங்காளு கிட்ட கேளுங்க.. சிவலோகத்துக்கே வழிகாட்டுவார்” எ.வ. வேலு சொன்ன கலகல பதில்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Madhavan P | Jan 06, 2022 05:54 PM

தமிழக சட்டப்பேரவை கூட்டம் நேற்று துவங்கியதைத் தொடர்ந்து முதல்நாளே அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். இந்நிலையில், இன்று கூடிய சட்டசபை இரண்டாம் அமர்வில், கலப்பான சம்பவம் ஒன்று நடந்துள்ளது.

TamilNadu Assembly : Vaigundam Minister ev.velu’s Humorous Answer

திருச்செங்கோடு எம்எல்ஏ ஈஸ்வரன் இன்று சட்டசபையில் பேசுகையில், கோழிக்கால் நத்தத்தில் இருந்து சேலம் கொச்சின் தேசிய நெடுஞ்சாலையை இணைக்கின்ற ரயில்வே சுரங்கப்பாதையை திறந்து வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இந்த சாலையில் உள்ள ரயில்வே கேட்டுகளுக்கு சுரங்கப்பாதை போடப்பட்டுள்ளது. காஞ்சாம்புதூர் என்ற வைகுண்டத்தில் இருந்து அரை கிலோமீட்டருக்கு அருகில் மேட்டுக்காடு என்ற இடத்தில் முடிக்கப்பட்ட சுரங்கப்பாதை திறக்கப்படாமலேயே உள்ளது. அதை அமைச்சர் திறந்து வைக்க வேண்டும் என்று சுட்டிக்காட்டினர்.

TamilNadu Assembly : Vaigundam Minister ev.velu’s Humorous Answer

மேலும், இது கோழிக்கால் நத்தம் வைகுண்டத்தை இணைக்கும் சாலை மட்டுமல்ல, நாமக்கல் பகுதிகளில் இருந்து சேலம் கொச்சின் தேசிய நெடுஞ்சாலையை இணைக்கின்ற முக்கிய சாலை என ஈஸ்வரன் குறிப்பிட்டார். போக்குவரத்து நெரிசல் இப்பகுதியில் அதிகமாக இருப்பதால் சாலைகளை அகலப்படுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

எ.வ. வேலுவின் பதில்

TamilNadu Assembly : Vaigundam Minister ev.velu’s Humorous Answer

திருச்செங்கோடு எம்எல்ஏ ஈஸ்வரன் கேள்விக்கு பதில் சொன்ன அமைச்சர் எ.வ. வேலு “உறுப்பினரின் கோரிக்கைகள் பற்றி கலந்து ஆலோசித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

சட்டசபையில் ராஜேந்திர பாலாஜி பற்றிய பேச்சையே காணோம்.. அமைதிகாத்த அதிமுக எம்எல்ஏக்கள்.. என்ன காரணம்?

வைகுண்டத்திற்கு வழி

இதனைத் தொடர்ந்து பேச எழுந்த எழுந்த ஓ.பன்னீர் செல்வம், சேலம் கோழிக்கால் நத்தம் வழியாக வைகுண்டத்திற்கு சாலை அமைக்க வேண்டும் என்று உறுப்பினர் ஈஸ்வரன் கேள்விக்கு அமைச்சர் எ.வ. வேலு பதில் கூறியிருக்கிறார். “வைகுண்டத்திற்கு சாலை அமைக்க வேண்டும் என்றால் முதலில் கிருஷ்ணபரமாத்மாவிடம் அனுமதி பெற வேண்டும். அனுமதி வாங்கிவிட்டீர்களா? என்று அமைச்சர்கள் பதில் தர வேண்டும்” என்றும் ஓபிஎஸ் கேட்டுக்கொண்டார்.

TamilNadu Assembly : Vaigundam Minister ev.velu’s Humorous Answer

சிவலோகத்துக்கே வழி

ஓபிஎஸ் அவர்களின் இந்தக் கேள்வியைக் கேட்டதும் சபாநாயகர் அப்பாவு சிரித்தார். இதனைத்தொடர்ந்து ஓபிஎஸ் கேள்விக்கு புன்னகையுடன் பதில்கூறிய எ.வ. வேலு, “17ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு சாலைப்பணிகள் நடைபெறுவதாக கூறினார். ஆன்மீகத்தில் திளைத்திருக்கிற அண்ணன் ஓபிஎஸ் வைகுண்டத்திற்கு எப்படி அனுமதிக்கப்படுமா? என்று கேட்கிறார்கள்.

கல்யாணமாகி 11 வருசமா ஏம்மா புருஷன் வீட்டுக்கு போகல..? மனைவி சொன்ன ‘ஒரு’ காரணம்.. உடனே ‘விவாகரத்து’ கொடுத்த நீதிமன்றம்..!

TamilNadu Assembly : Vaigundam Minister ev.velu’s Humorous Answer

ஆன்மீகத்திற்கு என்றே நியமிக்கப்பட்டுள்ள அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஐந்தரை மணிக்கே வைகுண்டத்திற்கு வழிகாட்டுவார். அறநிலையத்துறையின் மூலம் பல பணிகள் நடைபெற்று வருகின்றன. சிவலோகத்திற்கு போவதாக இருந்தாலும் வைகுண்டத்திற்கு போவதாக இருந்தாலும் வழிகாட்டும் பணிகளில் சேகர்பாவு ஈடுபட்டுள்ளார்” எனக் கூற அவையினர் அனைவரும் சிரித்துவிட்டனர்.

Tags : #E.V.VELU #TAMILNADU #OPS #எ.வ.வேலு #தமிழகம் #ஓபிஎஸ்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. TamilNadu Assembly : Vaigundam Minister ev.velu’s Humorous Answer | Tamil Nadu News.