நல்ல சம்பளம் இல்லையா?.. 'இந்த உருளைக்கிழங்க சாப்பிட்டு எப்படி இருக்குனு சொல்லுங்க'!.. ஈஸியா லைஃப்ல செட்டில் ஆகிடலாம்!
முகப்பு > செய்திகள் > உலகம்இங்கிலாந்தில் வறுத்த உருளைக்கிழங்கை ருசித்து பார்க்க மாத சம்பளத்துடன் நல்ல வேலை வழங்கப்படும் என்று பிரபல உணவகம் அறிவித்துள்ளது.

இங்கிலாந்து நாட்டிலுள்ள The Botanist என்ற ஹோட்டல் சமீபத்தில் சூப்பர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த உணவகத்தில் தயாரிக்கப்படும் சுவையான வறுத்த உருளைக்கிழங்கை சுவை பார்க்க வேலைக்கு ஆட்களை தேடி வருகின்றனர்.
அதுவும் வெறும் உருளைக்கிழங்கை சுவைத்து பார்ப்பதற்கு மாத சம்பளம் ரூ.50,000 வரை அறிவித்துள்ளது. சுவையான உருளைக்கிழங்கை வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கும் விதத்தில் இது தொடங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி, இந்த பணிக்கு ஆள் எடுக்க இருப்பதாகவும் இந்த பணிக்கு செப்டம்பர் 10ஆம் திகதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து ஏராளமானோர் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. மேலும், சுவை பார்ப்பதற்கு 50 ஆயிரம் ரூபாய் வரை சம்பளமா என பலரும் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர்.

மற்ற செய்திகள்
