'36 ஆயிரத்தைத் தாண்டிய தங்க விலை'... 'இன்று சற்று நிம்மதி'... இன்றைய விலை நிலவரம் என்ன?

முகப்பு > செய்திகள் > வணிகம்

By Jeno | Apr 28, 2021 06:29 PM

சில நாட்களாகக் குறைந்து வரும் தங்கம் விலை இன்றும் குறைந்துள்ளது.

Gold Prices See a Decline, Silver on the Rise

தொழில்துறை தேக்கத்தைத் தொடர்ந்து உலகம் முழுவதுமே தங்கம் விலையில் நிலையின்மை நிலவுகிறது. முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளில் கவனம் செலுத்த முடிவெடுத்து, பங்குச் சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என இருந்த முதலீடுகளை மாற்றித் தங்கத்தில் முதலீடு செய்யத் தொடங்கினர். இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்து, அதன் விலை கணிசமாக உயர்ந்து வந்தது.

இந்த சூழ்நிலையில் தங்கம் விலை கடந்த 21-ந் தேதி பவுன் ரூ.36 ஆயிரத்தைத் தாண்டியது. மறு நாளிலிருந்து விலை குறைந்தபடியே இருந்து வருகிறது. நேற்று பவுனுக்கு ரூ.40 குறைந்து ரூ.35 ஆயிரத்து 720-க்கு விற்றது. இந்த நிலையில் இன்றும் தங்கம் விலை குறைந்தது. சென்னையில் இன்று காலை தங்கத்தின் விலையில் பவுனுக்கு ரூ.216 குறைந்து ரூ.35 ஆயிரத்து 504-க்கு விற்றது. கிராமுக்கு ரூ.27 குறைந்து ரூ.4 ஆயிரத்து 438 ஆக உள்ளது.

Gold Prices See a Decline, Silver on the Rise

தங்கத்தைப் போலவே வெள்ளி விலையும் குறைந்தது. வெள்ளி கிலோவுக்கு ரூ.500 குறைந்து ரூ.73 ஆயிரத்து 500 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.73.50-க்கு விற்கிறது. தங்கம் விலை 6 நாட்களில் பவுனுக்கு ரூ.552 குறைந்துள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்தே தங்கம் விலை குறைந்து வந்தது. இதனால் தங்கம் பவுன் ரூ.34 ஆயிரத்துக்குக் கீழ் வந்தது.

இதற்கிடையே சமீபத்தில் பல்வேறு மாநிலங்களில் கொரோனா காரணமாகக் கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டதால் தொழில்கள் முடங்கியது. இதையடுத்து தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகரித்ததால் விலை உயர்ந்து வந்தது. தற்போது தொடர்ந்து விலை குறைந்து வருவது வாடிக்கையாளர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #GOLD PRICE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Gold Prices See a Decline, Silver on the Rise | Business News.