கொரோனா ஏற்படுத்திய பாதிப்பின் காரணமாகத் தொழில் துறை அடியோடு முடங்கிப் போனது. இதனால் பொருளாதாரமும் கடுமையான சரிவைச் சந்தித்தது. இதனால் உலகம் முழுவதுமே முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடு பக்கம் திரும்பினர். பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என மற்ற பலவற்றிலிருந்த முதலீடுகளையும் மாற்றி தங்கத்தில் முதலீடு செய்தனர்.

பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருவதால் அதன் தேவை அதிகரித்து வருகிறது. இதனால் அதன் விலையும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதே நேரத்தில் கொரோனா குறித்து மக்கள் மத்தியில் நிலவும் அச்சமும் இன்னும் முழுமையாக விலகவில்லை. இதனால் தங்கம் விலையில் தற்போது ஏற்ற இறக்கங்கள் நிலவி வருகின்றன. கடந்த பல நாட்களாகத் தொடர்ந்து தங்கம் விலை ஏறுமுகமாகவே இருந்து வந்தது.
இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.97 உயர்ந்து ரூ.4733 -க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.776உயர்ந்து ரூ.37864க்கு விற்பனையாகிறது. இதேபோல் 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை 8 கிராம் 40904 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதேசமயம் வெள்ளியின் விலை ரூ.2.90 உயர்ந்து 69.50 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

மற்ற செய்திகள்
