கொரோனா பரவல் காரணமாக தொழில்துறை கடுமையான சரிவைச் சந்தித்துள்ளது. இதனால் பலரும் பாதுகாப்பான முதலீடாகத் தங்கத்தையே பார்க்கிறார்கள். இதனால் தங்கத்தில் முதலீடு செய்வது என்பது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் தங்கத்தின் விலை அதிகரித்துக் கொண்டே சென்றது. அதே வேளையில் கொரோனா பரவல் காரணமாக தொழில்துறை தேக்கம் குறித்த பீதி நிலவி வரும் நிலையில், தங்கம் விலையில் தற்போது ஏற்ற இறக்கங்கள் நிலவி வருகின்றன.

இந்தநிலையில் இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 33 உயர்ந்து ரூ.4428க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.264 உயர்ந்து ரூ.35,424க்கு விற்பனையாகிறது. இதேபோல் 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை 8 கிராம் 38,496 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
வெள்ளியின் விலை 1.30 ரூபாய் உயர்ந்து 75.70 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதேபோல 1 கிலோ வெள்ளியின் விலை இன்று ரூ.75,700 ஆக உள்ளது.

மற்ற செய்திகள்
