'தங்கம் வாங்க சரியான நேரம் போல'... 'ரூ. 34 ஆயிரத்திற்கு கீழ் இறங்கிய விலை'... இன்றைய நிலவரம் என்ன?
முகப்பு > செய்திகள் > தமிழகம்நேற்று மாலை நிலவரப்படி தங்கம் விலை சவரனுக்கு ரூ. 232 குறைந்திருந்தது.

தங்கத்தின் மீதான கலால் வரி குறைக்கப்பட்டதில் இருந்து தங்கத்தின் விலை குறைந்து வருகிறது. அந்த வகையில் இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து தங்கத்தின் விலை இறங்கு முகத்திலேயே காணப்படுகிறது. இதன்காரணமாக நேற்றும் தங்க விலை குறைந்திருந்தது.
இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 4238 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று மாலை இதன் விலை ரூ. 4264ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 26 குறைந்துள்ளது. அதேபோல, நேற்று மாலை நிலவரப்படி ரூ. 34,112-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு சவரன் ஆபரணத் தங்கம் இன்று ரூ. 208 குறைந்து ரூ. 33,904-க்கு விற்பனையாகிறது.
ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை கோயம்புத்தூர் மற்றும் திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் ரூ. 4238 விற்பனை செய்யப்படுகின்றது. ஒரு கிராம் வெள்ளி நேற்று மாலை நிலவரப்படி ரூ. 72.80 விற்பனை ஆன நிலையில் இன்று கிராமிற்கு ரூ. 1.20 விலை குறைந்து ரூ.71.60க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இந்த வாரத்தின் தொடக்க நாளான திங்களில் இருந்து தொடர்ந்து குறைந்து கொண்டே உள்ளது. நேற்று மாலை நிலவரப்படி தங்கம் விலை சவரனுக்கு ரூ. 232 குறைந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு ரூ. 208 விலை குறைந்துள்ளது. இந்நிலையில் இன்று தங்கத்தில் விலை தொட்ர்ந்து குறைந்ததால் சவரன் விலை 34,000 குறைவாக விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் இன்றும் தங்கத்தின் விலை குறைந்த நிலையில் சவரன் ரூ.33,904க்கு விற்பனையாகிறது.

மற்ற செய்திகள்
