'ரூ. 35 ஆயிரத்தைத் தாண்டிய தங்க விலை'... 'அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்'... இன்றைய விலை நிலவரம் என்ன?
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரன் 35 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.

கடந்த ஆண்டு கொரோனா காரணமாக அமல்படுத்தப்பட்ட பொது முடக்கம் தொழில்துறையைக் கடுமையாகப் பாதித்தது. இதனால் பொருளாதாரம் கடுமையான சரிவைச் சந்தித்தது. இதனால் உலகம் முழுவதுமே முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளின் பக்கம் திரும்பினர். பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என மற்ற பலவற்றிலிருந்த முதலீடுகளையும் மாற்றித் தங்கத்தில் முதலீடு செய்யத் தொடங்கினர்.
இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்து, அதன் விலை கணிசமாக உயர்ந்து வந்தது. கடந்த ஜனவரி மாதம் முதல் பொருளாதாரம் சற்று ஏற்றம் பெற்ற நிலையில், தங்க விலையிலும் சற்று ஏற்ற இறக்கங்கள் நிலவி வந்தது. கடந்த மாதம் தங்க விலை சற்று குறைந்து காணப்பட்டது. இந்நிலையில் தங்கம் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 15 உயர்ந்து ரூ.4380-க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.35040-க்கு விற்பனையாகிறது. இதேபோல் 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.37912-க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலை 1 கிராம் வெள்ளி 10 பைசா குறைந்து ரூ.71.60க்கு விற்பனையாகிறது. அதேபோல 1 கிலோ வெள்ளியின் விலை இன்று ரூ.71,600 ஆக உள்ளது.

மற்ற செய்திகள்
